நுவரெலியா- பூண்டுலோயா, பழைய சீன் தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பு ஒன்றில் ஆயுதமொன்றில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் பழைய சீன் தோட்டத்தில் வசித்த 47 வயதான இரு பிள்ளைகளின் தாயான பெருமாள் மாலா என்பவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவரை கைது செய்துள்ள பொலிஸார், தனிப்பட்ட தகராரே கொலை இடம்பெறுவதற்கு காரணமாக இருக்கலாம் […]

பருத்தித்துறை – மருதங்கேணி வீதி புனரமைப்பு பணியில் சீன பிரஜை ஒருவர் ஈடுபட்டுள்ளமை தொடர்பான புகைப்படம் ஒன்றினை தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பதிவேற்றியுள்ளார். அதில் யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்ற நிலையில் அவர்களுக்கு ஏன் இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி. இவர் குடும்பத்துடன் குரோம்பேட்டையில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக ஜெமினி ராஜேஸ்வரிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94. ஜெமினி ராஜேஸ்வரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்து இருக்கிறார். சந்திரலேகா படம் மூலம் சினிமாவில் நடன நடிகையாக அறிமுகமானார். 400 படங்களுக்கு மேல் நடனம் ஆடி உள்ளார். காதல் படுத்தும் பாடு […]

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதாக யாழ் மாவட்ட அரசசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா நிலைமையை அவதானிக்கும்போது இன்று மாலை வரை யாழில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதேவேளை 87 ஆக […]

யாழில்.கணவருடன் முச்சக்கர வண்டியில் ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்த மனைவி மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வேலணை பகுதியை சேர்ந்த 32 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார் . சுன்னாகத்தில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு கணவனுடன் முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது , திடீரென மயக்கமுற்றுள்ளார். அதனை அடுத்து அவரை , யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது , அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். அந்நிலையில் […]

அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் சீனர்கள் இலங்கைக்குள் அனுமதியின்றி நுழையும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், புலனாய்வுப்பிரிவு உள்ளிட்டவை வலுப்படுத்தப்பட்டு தேசிய பாதுகாப்பு ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தது பொய்யாகும். அவ்வாறு […]

நாட்டில் தற்போது பயணத்தடை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கொண்டாட்ட நிகழ்வுகள் மற்றும் ஒன்று கூடல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்தும் அமுலில்உள்ளதாகவும், இதனை மீறுவோர் கைது செய்யப்படுவர்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. விருந்துபசாரங்கள், கொண்டாட்டங்கள், ஒன்று கூடல்கள் தொடர்ந்தும் தடை செய்யப்பட்டுள்ளன. அத்தோடு சில தொழில் நிறுவனங்களைத் திறப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் திறப்பதற்கு அனுமதி பெற்றுள்ள தொழில் நிலையங்கள் மற்றும் சேவை நிலையங்களில் சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்பட வேண்டும். இந்த […]

வேகக்கட்டுப்பாட்டை இழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் வாய்க்காலில் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். இம் மரணமானது கிளிநொச்சி பெரிய பரந்தன் D5 பகுதியில் நடைபெற்றுள்ளது.

Today Political Cartoons of Sri Lanka