யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்றாளர்கள் – 87 பேர் உயிரிழப்பு..!!!

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதாக யாழ் மாவட்ட அரசசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா நிலைமையை அவதானிக்கும்போது இன்று மாலை வரை யாழில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

அதேவேளை 87 ஆக கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 4 ஆயிரத்து குடும்பங்களைச் சேர்ந்த 13 ஆயிரத்து 793 நபர்கள் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சாவற்காடு கிராம அலுவலர் பிரிவும், யாழ்ப்பாண பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஜே/69 மற்றும் ஜே/71 கிராம அலுவலர் பிரிவும் மற்றும் கரவெட்டி பிரதேச செயலகத்துக்குட்பட்ட கரணவாய் பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

4 ஆயிரத்து150 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மிகுதியானவர்கள் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 8 ஆயிரத்து 297 குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபா உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

யாழ் மாவட்டத்திற்கு கிடைத்துள்ள 50 ஆயிரத்து தடுப்பூசிகளை இன்று தொடக்கம் முதல்தரம் தடுப்பூசி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது .

முதல்தரம் தடுப்பூசி பெற்ற நிலையங்களுக்கே சென்று தடுப்பூசிகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

நெடுந்தீவு தவிர்ந்த ஏனைய சகல பிரதேசங்களிலும் தடுப்பூசி போடும் பணி வெள்ளிக்கிழமை வரை இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.

Next Post

பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி மரணம்..!!

Mon Jun 28 , 2021
Post Views: 151 பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி. இவர் குடும்பத்துடன் குரோம்பேட்டையில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக ஜெமினி ராஜேஸ்வரிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94. ஜெமினி ராஜேஸ்வரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்து இருக்கிறார். சந்திரலேகா படம் மூலம் சினிமாவில் நடன நடிகையாக அறிமுகமானார். 400 படங்களுக்கு மேல் நடனம் ஆடி உள்ளார். […]

Today Political Cartoons of Sri Lanka