பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி மரணம்..!!

பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி. இவர் குடும்பத்துடன் குரோம்பேட்டையில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக ஜெமினி ராஜேஸ்வரிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94. ஜெமினி ராஜேஸ்வரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்து இருக்கிறார். சந்திரலேகா படம் மூலம் சினிமாவில் நடன நடிகையாக அறிமுகமானார்.

400 படங்களுக்கு மேல் நடனம் ஆடி உள்ளார். காதல் படுத்தும் பாடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். கமல்ஹாசனின் 16 வயதினிலே, பாக்யராஜின் சின்ன வீடு மற்றும் மண் வாசனை, நிறம் மாறாத பூக்கள், நீறு பூத்த நெருப்பு, இது எங்க நாடு, விளையாட்டு கல்யாணம், பத்தாம் பசலி, உனக்காக நான், திருடன், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன். எதிர்நீச்சல் மற்றும் கயல் உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார்.

மரணம் அடைந்த ஜெமினி ராஜேஸ்வரிக்கு தட்சிணாமூர்த்தி, செல்வராஜ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ஜெமினி ராஜேஸ்வரி மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Next Post

யாழில் வீதி புனரமைப்பு பணியில் சீன பிரஜை..!!!

Tue Jun 29 , 2021
Post Views: 906 பருத்தித்துறை – மருதங்கேணி வீதி புனரமைப்பு பணியில் சீன பிரஜை ஒருவர் ஈடுபட்டுள்ளமை தொடர்பான புகைப்படம் ஒன்றினை தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பதிவேற்றியுள்ளார். அதில் யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்ற நிலையில் அவர்களுக்கு ஏன் இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Today Political Cartoons of Sri Lanka