கிளிநொச்சி – கனகபுரம் பகுதியில் மருத்துவர் ஒருவருடைய 50 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் அதிகளவானோர் கலந்து கொண்டு நடப்பதாக பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் குறித்த வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி கனகபுரத்தில் மருத்துவர் ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாடம் நடைபெறுவதாகவும் நிகழ்வில் 20 இற்கும் மேற்பட்ட சுகாதாரத் தரப்பினர் உட்பட்ட பெருமளவானவர்கள் பங்குகொண்டிருப்பதாகவும் பொதுமக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது. இதயைடுத்து சம்பவ இடத்திற்குள் நுழைந்துள்ள பொலிஸார் […]

கோண்டாவில் காளி கோவிலடியில் கடன் பணத்தைக் கேட்டு வீடு தேடிச் சென்றவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தந்தையும் மகனும் இணைந்து அவரின் தலை மற்றும் கழுத்தில் வாளினால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் திங்கட்கிழமை நண்பகல் இடம்பெற்றது. சம்பவத்தில் மோகனராஜா ரஜீவன் (வயது-37) என்பவரே சம்பவத்தில் படுகாயமடைந்தார். சம்பவத்தையடுத்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் தாக்குதல் நடத்திய இருவரும் கைது செய்யப்பட்டனர். சம்பவம் […]

எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆகும் போது நாட்டை முழுமையாக திறக்கக்கூடியதாக இருக்கும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் இன்று இடம்பெற்ற 99 ஆவது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். உலகளவில் பரவியுள்ள கொவிட் நோயைத் தடுப்பதற்கு தடுப்பூசிகளே தீர்வாக உள்ளன. மகிழ்ச்சியடையும் வகையில் இலங்கைக்கு இந்த மாதத்தில் 9 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. அவற்றை மக்களுக்கு […]

இன்று காலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூன்று மாவட்டங்களில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மாத்தறை, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் நான்கு பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்தார். மாத்தறை உயன வத்த உயனவத்த வடக்கு யாழ்ப்பாணம் நாரந்தனை வடமேற்கு களுத்துறை புஹாபுடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மலபடவத்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பின் புறநகர் பகுதியான ராகம பிரதேசத்தில் வீட்டு வாசலில் இருந்து 20 பாம்பு குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை பாம்பு ஒன்று சிறுவனை தீண்டியுள்ளது. இதனை தொடர்ந்து அவ்விடத்திற்கு சென்று சோதனையிட்ட போது 20 பாம்பு குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் உடனடியாக ராகம பொலிஸாரருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்று ராமக பொலிஸார், பாம்பு மற்றும் அதன் குட்டிகளை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உடுவில் – மல்வம் பகுதியில் கசிப்பு போதைப்பொருள் விற்பனை செய்யும் குழு ஒன்று மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதலில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுஇ உடுவில் மல்வம் பகுதியில் சட்டவிரோத மது (கசிப்பு) விற்பனையில் ஈடுபடும் குடும்பஸ்தர் ஒருவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதுவரை மூன்று தடவைகளுக்கும் மேல் கைது செய்யப்பட்டு […]

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் ஜூலை 19ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜூலை 5ஆம் திகதி முதல் மேலும் 14 நாட்களுக்கு மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்கள் சுற்றறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் நேற்று மாலை வாள் வெட்டுக்குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பி சென்றுள்ளது. கொடிகாமம் கெற்பேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் மாலை வாள்களுடன் புகுந்த கும்பல் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தல் விடுத்து வீட்டின் மீதும் இ வீட்டினை சுற்றி இருந்த வேலிகள் மீது தாக்குதல் நடாத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் பொலிஸார் விசாரணைகளை […]

Today Political Cartoons of Sri Lanka