இவ்வாரம் முதல் குறைந்த வருமானம் கொண்ட அனைத்து குடும்பங்களுக்கும் 5000 ரூபாய்..!!

சமூர்த்தி உதவிக்கு மேலதிகமாக குறைந்த வருமானம் கொண்ட அனைத்து குடும்பங்களுக்கும் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்காக நேற்றைய தினம் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றுள்ளது.

முதற்கட்டமாக 21 இலட்சம் குடும்பங்களுக்கு இந்நிவாரண நிதியை வழங்கும் நடவடிக்கை இவ்வாரம் முதல் முன்னெக்கப்படும் என சமுர்த்தி மற்றும் நுண்கடன் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ஆயிரம் ரூபா நிவாரண நிதி வழங்கல் குறித்து வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையினை அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் செயற்படுத்தியுள்ளது.

கொவிட் வைரஸ் முதலாம் அலை ஏற்பட்ட போது மூன்று மாத காலமாக நாடு முழுமையாக முடக்கப்பட்டிருந்தது. இதன் போது சுமார் 50 இலட்சம் குடும்பங்களுக்கு 5000 ஆயிரம் ரூபா நிவாரண நிதி வழங்கப்பட்டது.

இதே போன்று இரண்டாம் அலையின் போது பொருளாதார மட்டத்தில் பாதிக்கப்பட்ட 50 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க 25 பில்லியன் நிதியும்இ கடந்த ஏப்ரல் மாதம் சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் ; தெரிவு செய்யப்பட்ட 30 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க 12 பில்லியன் நிதி செலவிடப்பட்டுள்ளன.

புதுவருட கொவிட் கொத்தணி தாக்கத்தினை தொடர்ந்து சமுர்த்தி பயனளார்கள் இ மற்றும் தெரிவு செய்யப்பட்ட 60 இலட்சம் குடுமபங்களுக்கு நிவாரணம் வழங்க 30 பில்லியன் நிதி முதற்கட்டமாக ஒத்துக்கிடப்பட்டது.

5000 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்கும் நடவடிக்கை கடந்த 2 ஆம் திகதி தொடக்கம் நாடுதழுவிய மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. சுமார் 30 இலட்சம் குடும்பங்களுக்கு இதுவரையில் 5000 ஆயிரம் ரூபா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

புதுவருட கொவிட் கொத்தணி பரவல் காரணமாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் ; சமுர்த்தி பயனாளர்கள் தவிர்ந்த குடும்பங்களுக்கு 5000 ஆயிரம் ரூபா நிவாரண நிதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தரப்படுத்தலின் பிரகாரம் சுமார் 21 இலட்சம் குடும்பங்கள் இந்நிதியை பெற தகுதி பெற்றுள்ளனர் என்றார்.

Next Post

21ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு பற்றி வெளிவந்த தகவல்..!!

Tue Jun 15 , 2021
Post Views: 512 இலங்கையில் ஒவ்வொரு 100 பேரில் ஒருவருக்கு கோவிட் தொற்று இருப்பதாகவும், தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவோரில் ஒரு வீதத்தினர் மரணிப்பதாகவும் உலக நாடுகளின் கோவிட் தரவுகளை வெளியிட்டு வரும் “வேர்ள்ட் மீற்றர்” இணையத்தளம் தெரிவித்துள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 21ஆம் திகதி தளர்த்துவதா? இல்லையா? என்பது குறித்து இந்த வாரத்தில் அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படும் என்று சுகாதார சேவைகள் […]

Today Political Cartoons of Sri Lanka