பிள்ளையார் என பெயர் பொறிக்கப்பட்டிருந்த லொறியில் இருந்து மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நெடுந்தீவிலிருந்து கடத்தப்பட்ட 18 கிலோகிராம் மாட்டிறைச்சியுடன் இரு நபர்கள் புங்குடுதீவில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு பாடசாலையொன்றின் திருத்த பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனமொன்றின் வாகனத்தில் சட்டவிரோதமாக மாட்டிறைச்சியை கடத்திச் செல்லவுள்ளதாக நெடுந்தீவிலிருந்து தீவக சிவில் சமூக உறுப்பினர்களுக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது . இதனையடுத்து உடனடியாக கடற்படை […]

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரின் அஸ்தியுடன் 11 மாத குழந்தை விமானத்தில் வந்திறங்கிய சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. தமிழகத்தின், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வேலவன். இவருக்கு பாரதி என்ற மனைவியும், மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். இதில், மூத்த மகன் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவனை பார்த்துக் கொள்வதற்கே வேலவனுக்கு நேரம் சரியாக இருந்து வந்துள்ளது. அதுமட்டுமின்றி, மகனின் […]

தமிழில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மீராமிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். இவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து மீராமிதுன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நான் ஒரு அமைப்புக்காக வேலை பார்த்து பிரபலப்படுத்தினேன். 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த அமைப்பில் இருந்து விலகினேன். அதை நடத்தியவர் செய்த அநீதியால் அமைப்பில் இருந்து விலகினேன். […]

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,95,70,881 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் 2726 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,77,031 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் […]

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் 16 வயது சிறுமியை மயக்கமருந்து கொடுத்து கடத்தி, சிறுவன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் நடந்துள்ளது. ஆனால், 6 மாதத்துக்கு பிறகு சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில், அவள் கர்பமாக இருக்கிறாள் என தெரியவந்த பிறகு இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி, கடந்த ஆண்டு டிசம்பரில் போபாலில் உள்ள […]

உத்தரப்பிரதேசம்- ஆக்ரா, தாராயாய் கிராமத்தில் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று (திங்கட்கிழமை) காலை, விளையாடிக்கொண்டிருந்த குறித்த குழந்தை தவறுதலாக ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளது. இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக பதேஹாபாத்திலுள்ள நிபோஹாரா பொலிஸ் நிலையத்துக்கு சம்பவம் தொடர்பாக தகவல் வழங்கியுள்ளனர். குறித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குழந்தையை மீட்கும் […]

இந்திய மாநிலம் கேரளாவில் சமூக ஊடகங்களில் பதிவேற்றிய வீடியோவிற்கு பொதுமக்களின் கருத்துக்களால் இளைஞரை கொலைக்கு தூண்டியுள்ளது. கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த 28 வயது ஆதிரா என்பவரேஇ தீ காயங்களால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இவ் விவகாரம் தொடர்பில் ஆதிராவின் தாயார் அம்பிளி அவர்கள் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஆதிராவுடன் வசித்து வந்த ஷானவாஸ் என்பவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் வீடியோ பதிவேற்றம் […]

Today Political Cartoons of Sri Lanka