தேவையற்று அழைக்காதீர்கள் – இராணுவத்தளபதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்…

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்களை மாத்திரம் கடமைக்கு அழைக்குமாறு கொரோனா தடுப்புக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் தேவையற்ற விதத்தில் அதிகமான ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிற்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை பிரதேச செயலாளர் அலுவலக அனுமதி இல்லாமல் திறக்கப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மாஅதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Next Post

தூக்கத்தில் கண்களை எதுவோ கடிப்பதுபோல் தெரிய பதறி எழுந்த பெண்- பரபரப்பான திக் திக் நிமிடங்கள்....!!!

Mon Jun 14 , 2021
Post Views: 537 தூக்கத்தில் கண்களை ஏதோ கடிப்பதுபோல் தெரியவே பதறிப்போய் கண் விழித்துள்ளார் ஒர் அவுஸ்திரேலிய பெண். பார்த்தால், எலி ஒன்று அவரது கண்களை சுவைத்துக்கொண்டிருந்திருந்திருக்கிறது. உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். கேட்பதற்கு நம்ப முடியாத விடயமாக இது தோன்றலாம். ஆனால், உண்மையாகவே அவுஸ்திரேலியாவை துவம்சம் செய்து கொண்டிருக்கின்றன எலிகள், ஒன்றல்ல இரண்டல்ல, பல மில்லியன் எலிகள். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் இந்தப் பெண். Mick Harris என்னும் […]

Today Political Cartoons of Sri Lanka