உலக நாடுகளில் வேகமாக பரவிக் கொண்டுள்ள டெல்டா வைரஸ் தொற்றானது தற்போது திரிபுபட்ட வைரஸாக மாற்றமடைந்து பரவுகின்ற காரணத்தினால் அது குறித்து இலங்கையிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் நாட்டின் பயணத்தடை நீக்கப்பட்டுள்ளமையானது ஆரோக்கியமானதல்ல எனவும் எச்சரித்துள்ளனர். இப்போது பரவும் டெல்டா வைரஸ் நாட்டிற்குள் வேகமாக பரவ ஆரம்பித்தால் மீண்டும் பொது முடக்கத்துக்கு செல்ல வேண்டி வரும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

யாழ்.பருத்தித்துறை – தும்பளை பகுதியில் 6 மாத குழந்தை மற்றும் 9 வயது சிறுவனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சளி காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக சென்ற 13 வயதுச் சிறுமிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடன் நேரடித் தொடர்பு கொண்ட குடும்பத்தினருக்கு நேற்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 6 மாத குழந்தை மற்றும் 9 வயதுச் சிறுவருக்கும் கொரோனா […]

நாட்டில்பயணக்கட்டுப்பாடு நேற்று(23) இரவு 10 மணிமுதல் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு கைது செய்யப்படுபவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர்இ சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை இன்று (24) தெரிவித்தார். கைது செய்யப்படுபவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். அத்துடன், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் அசையும்இ அசையா சொத்துகள் […]

கொட்டகலை சுகாதார வைத்தி அதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட கிரேட்வெஸ்டன் தோட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த கர்ப்பிணி பிரசவித்த சிசு உயிரிழந்துள்ளதென, கொட்டகலை சுகாதார வைத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த கர்ப்பிணி தாய் லிந்துலை வைத்தியசாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் பிரசவித்த சிசு நேற்று (23) உயிரிழந்துள்ளது. இதனையடுத்து தாயின் நிலை மோசமடைந்ததையடுத்து, அவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு என்டிஜன் பரிசோதனை செய்யபட்டு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

பண்டத்தரிப்பு பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி திருமணம் செய்த மணமகனுக்கு மல்லாகம் நீதிமன்றம் 20ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பண்டத்தரிப்பு பகுதியில் கடந்த 4ஆம் திகதி திருமண நிகழ்வு நடைபெற்றது. இதன் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது, அதிகளவானோர் திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். இது தொடர்பில் சுகாதார பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து மணமக்கள் குடும்பத்தினர் […]

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் உட்பட 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொதுமன்னிப்பின் கீழ் அவர்கள் இன்று (வியாழக்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேரைத் தவிர்த்து சிறிய குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 77 பேரும் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நீண்ட காலம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் […]

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் குருணாகல் மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தின், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவின் குருநகர் மேற்கு மற்றும் ரெக்லமேசன் மேற்கு முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில், காத்தான்குடி பொலிஸ் பிரிவின் மஞ்சதொடுவாய் வடக்கு மற்றும் மஞ்சதொடுவாய் தெற்கு ஜின்னா வீதி கிராம சேவகர் பிரிவும், மண்முனை பொலிஸ் பிரிவின் மாமாங்கம் கிராம […]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ மீண்டும் இலங்கை வந்தடைந்துள்ளார். அவர் கடந்த ஒரு மாத காலப்பகுதிக்கும் மேலாக அமெரிக்காவில் தனிப்பட்ட பயணம் ஒன்றில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை அவர் நாடு திரும்பியுள்ளார். அவர் நாடு திரும்பியவுடன் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலை தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார். பசில் ராஜபக்ஷ இலங்கையில் […]

Today Political Cartoons of Sri Lanka