நாடு முழுவதும் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் 103 வீடுகளுக்கு கடுமையான சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களே இவ்வாறு பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு, குறித்த காலப்பகுதியில் 88 வாகனங்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 7 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் திகதி அலரி மாளிகை முன்பாக மகிந்தவிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை தாக்கியிருந்தனர். இதனையடுத்து நாட்டின் பல பகுதிகளில் வன்முறைகள் வெடித்திருந்தன. இவ்வாறான சூழ்நிலையில் பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16வது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. தளர்த்தப்பட்டது ஊரடங்கு […]

புதன்கிழமை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி வரையறுக்கப்பட்ட ரீதியில் அத்தியாவசிய சேவைகளை கருத்திற்கொண்டு மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் புதன்கிழமை முதல் அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டுள்ளோருக்காக இந்த பொது போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

யாழில் ஒன்லைனில் ஆசைஆசையாக லெக்பீஸ் ஓடர் செய்து காத்திருந்தவருக்கு தசையின்றி வெறும் கோழி கால் மட்டுமே கிடைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் தமக்கு வந்த லெக்பீஸை முகநூலில் பதிவேற்றியதுடன் அது தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கையினையும் விடுத்துள்ளார். அதாவது காசை இவ்வாறு வீணடித்து ஒன்லைனில் உணவு வாங்க விரும்புபவர்கள் தன்னை போல ஏமாறவேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

போதைக்கு அடிமையான மகனால் கோடரி தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயம் அடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாய் ஒருவர் இன்று பிற்பகல் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிசார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் களுத்துறை பாலதோட்டவில் வசிக்கும் அனுலா பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த 17 ஆம் திகதி சமைத்துக்கொண்டிருந்த தாயை சந்தேகநபரான மகன் கோடரியால்அடித்துள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த அவர் நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் மேலதிக […]

உரிய முறையில் சுகாதார நெறிமுறைகளை மக்கள் பின்பற்றாவிட்டால் மீண்டும் நாடு முழுவதிலும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படும் என சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் நாயகமும், சுகாதார அமைச்சின் பேச்சாளருமான டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். புதிய சுகாதார நெறிமுறைகள், வழிகாட்டல்களுக்குக் கீழ் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டமைக்கு, கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்தது காரணமில்லை எனவும் , மாறாக நாட்டில் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டே […]

நெல்லியடி பொலிஸ் பிரிவில் தனது மனைவியை நடுவீதியில்விரட்டி விரட்டி வெட்டிய கொடூர கணவனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, இன்று (12) மதியம் இந்த கொடூர சம்பவம் மனைவியை நடுவீதியில் விழுத்தி சரமாரியாக வெட்ட ஆரம்பிக்க, வீதியில் சென்ற பொதுமக்கள் துரிதமாக செயற்பட்டதால் குடும்பப் பெண் மயிரிழையில் காப்பாற்றப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மத்தொனி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. படுகாயமடைந்த பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடூரன் தலைமறைவாகி […]

நேற்றையதினம் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தான் உட்பட குழுவினரை பலவந்தமாக கடத்தி செல்வதாக பெண் ஒருவர் காணொளி வெளியிட்டுள்ளார். கொழும்பு நாடாளுமன்ற சுட்ட வட்ட வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய போது தாக்கப்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தனிமைப்படுத்தலுக்காக அழைத்து செல்லப்பட்ட போது பேருந்தில் இருந்த குறித்த பெண் வீடியோ ஒன்றை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “எனது ஆடைகளை கிழத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார்கள். இதுவா சட்டம்? இதுவா […]

Today Political Cartoons of Sri Lanka