யாழ்ப்பாணம் கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் நேற்றிரவு வாள்வெட்டுக்கு இலக்காகிய ஒருவரின் துண்டாடப்பட்ட கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்களின் கூட்டு முயற்சியினால் மீள பொருத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை கூடத்தில் நேற்றிரவு 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட சத்திரசிகிச்சை இன்று அதிகாலை 4 மணிக்கு வெற்றிகரமாக நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒட்டுறுப்பு சத்திரசிகிச்சை (Plastic Surgery) வல்லுநர் இளஞ்செழிய […]

யாழ்.மாவட்டத்தில் 50 பேர் உட்பட வடக்கில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. நேற்றய தினம் யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலை மருத்துவபீட பரிசோதனை கூடங்களில் 632 பேருக்கு செய்யப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனைகளில் வடக்கில் 59 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனம்காணப்பட்டுள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலை – 10, தெல்லிப்பழை வைத்தியசாலை – 01, பருத்தித்துறை வைத்தியசாலை – 06, மானிப்பாய் வைத்தியசாலை – […]

யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தை அடுத்து தென்மராட்சியின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டு உள்ளது. யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில் மீசாலை பகுதியில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிசாரின் பேருந்துக்கு பின் பக்கமாக டிப்பர் வாகனம் மோதி விபத்துக்கு உள்ளானது. அதனால் அருகில் இருந்த மின் கம்பம் சேதமடைந்து கொடிகாமம் , மீசாலை மற்றும் சாவகச்சேரி உள்ளிட்ட சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் […]

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட கோண்டாவில் இலங்கை பேருந்து சாலைக்கு பின்புறமாக உள்ள பகுதியில் இடம்பெற்ற வன்முறையில் குறைந்தது 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரது கை துண்டாடப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீபத்துக் காரணமாக அதனைக் கட்டுப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் கூறினர். இந்தச் சம்பவம் செல்வபுரம் சிவன் கோவிலடியில் இன்றிரவு இடம்பெற்றது என்று பொலிஸார் கூறினர். இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த […]

அடுத்த வாரம் முதல் பாண் ஒன்றின் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்படும் என அனைத்து இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ மாவின் விலை 18 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார். எரிபொருள் விலை அதிகரித்ததன் காரணமாக, பாண் தவிர ஏனைய வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை 5 முதல் 10 ரூபா வரை அதிகரிக்க வேண்டியிருந்தது என அவர் […]

நாடு முழுவதிலும் பயணக்கட்டுப்பாடுகளை மீண்டும் விதிப்பதா இல்லையா என்பது குறித்த பேச்சுவார்த்தை அடுத்தவாரத்தில் நடைபெறவுள்ளது. கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்தார். கடந்த ஒருமாதகாலமாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை காரணமாகேவே இன்று நாளாந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை விட குறைந்திருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய நிலையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று […]

கல்கிசையில் 15 வயதான சிறுமி ஒருவர், பணத்துக்காக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவரது தாய் உள்ளிட்ட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இணையத்தளம் ஊடாக, குறித்த சிறுமி விளம்பரப்படுத்தப்பட்டு, பலருக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக, கல்கிசை தலைமையக காவல்நிலையத்துக்கு தெரியவந்திருந்தது. இதுதொடர்பாக விசேட காவல்துறை குழு ஒன்று விசாரணைகளை ஆரம்பித்தது. இதன்படி குறித்த சிறுமியை விற்பனை செய்ய முயற்சித்த 54 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலதிக விசாரணைகளின் படி, குறித்த […]

இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை இன்றைய தினம் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மாகாண எல்லைகளை கடக்க முயற்சிக்கும் வாகனங்கள் தொடர்ந்தும் திருப்பி அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அத்தியாவசிய சேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Today Political Cartoons of Sri Lanka