அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதேசத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மருதமுனை பிரதேசத்தை நாளை (1) முதல் முழுமையாக முடக்க இன்று (30) நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப் தலைமையில் மாநகர முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்ற உயர் மட்டக்கூட்டத்தில் மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாளை(1) இரவு முதல் மருதமுனை பிரதேசத்திற்கு வெளியில் இருந்து பொதுமக்கள் உட்பிரவேசிப்பதும், […]

கொக்குவில் மேற்கில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று, அங்கு இருந்த பெறுமதியான பொருட்களை அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பித்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். 6 மோட்டார் சைக்கிள்களில் வாள்,இரும்பு , கம்பி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய 9 பேர் கொண்ட கும்பல் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து பெறுமதியான தளபாடங்களை அடித்துடைத்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது. வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த […]

நாட்டில் கோவிட் – 19 வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலையொன்று இருக்கின்ற போதிலும் நாட்டினை முடக்கவோ அல்லது பயணக் கட்டுப்பாடுகளை பிறப்பிக்கவோ இப்போது எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கோவிட் கட்டுப்பாட்டு செயலணியின் பிரதானி இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஆனால் நாட்டின் அடுத்த கட்ட நிலைமைகளுக்கு அமைய தீர்மானங்கள் எப்போதும் மாறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். கோவிட் – 19 வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நிலை […]

வாட்ஸ் ஆப்பிற்கு நிகரான எம்எஸ்குயேட்(mSQUAD) எனும் புதிய செயலியை உருவாக்கி யாழ். மாணவன் ஒருவர் சாதனை படைத்துள்ளார். குறித்த மாணவன் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் தரம் 10 ல் கல்வி பயிலும், இணுவிலில் வசிக்கும் நக்கீரன் மகிழினியன் என்பவராவார். மேற்படி மாணவன் கடந்த பயணத்தடையின் போது வீட்டிலிருந்த காலப்பகுதியை குறித்த முயற்சிக்குப் பயன்படுத்தியதாகவும் தனக்கு இந்த முயற்சி வெற்றியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கண்டி பஹிரவகந்த பிரதேசத்தில் அமைந்துள்ள மிட்டாய் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பயிற்சி பெற்று வரும் சிறுவன் ஒருவனை கொடூரமாக தாக்கி அவரிடம் தவறாக நடந்துகொண்ட சந்தேகத்தின் பேரில் குறித்த நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கண்டி கெடவல விசேட தேவையுடைய குழந்தைகளுக்கான அரச தொழில் பயிற்சி நிறுவனத்தினால் குறித்த சிறுவன் அந்த நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான். அத்தோடு குறித்த மிட்டாய் உற்பத்தி நிறுவனத்திற்கு இவ்வாறு 03 […]

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற நயினாதீவைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் இன்று உயிரிழந்துள்ளார். அதேபோல், யாழ்ப்பாணம் – வெள்ளாந்தெரு பகுதியைச் சேர்ந்த 60 வயது ஆணும் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளார். இந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாவினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 91ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, மேலும் […]

மக்களிடையே இதுவரை பரவிய கோவிட் வைரஸ் வகைகளில் டெல்டா வகை உறுமாறிய கோவிட் தான் அதிக வேகமும் ஆபத்தும் கொண்டது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கோவிட் வைரஸ் பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்துள்ளது. பிரிட்டன், பிரேஸில், தென்னாபிரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கோவிட் வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளது. இந்தியாவில் உருமாறிய கோவிட் வைரஸூக்கு டெல்டா என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் டெல்டா வகை வைரஸ் மீண்டும் உருமாற்றமடைந்து […]

இலங்கையில் கோவிட் – 19 வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் இருப்பது போன்று தரவுகளில் வெளிப்பட்டாலும் அடுத்த மூன்று மாதங்களில் எதிர்பாராத தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையே காணப்படுகிறது. தரவுகளில் இதனை நிரூபிக்கும் கட்டத்தில் கோவிட் வைரஸ் பரவல் சமூக பரவலாக மாற்றமடைந்திருக்கும் என வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். டெல்டா வைரஸ் குறித்து அதிக கவனம் செலுத்தி முன்னாயத்த ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Today Political Cartoons of Sri Lanka