இலங்கை உட்பட 7 நாடுகளுக்கு தடை நீடிப்பு…

இலங்கை உட்பட 7 நாடுகளுக்கு, பிலிப்பைன் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாம்ளம், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு தொடர்ந்தும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக ஆரம்பத்தில் ஏப்ரல் 29 முதல் இந்தியா மீது பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது.

பின்னர் இலங்கை உட்பட பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கடந்த மே 7 ஆம் திகதி முதல் பயணத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா தொற்று அச்ச நிலைமையைக் கருத்திற் கொண்டு, பிலிப்பைன் ஜனாதிபதியி ரோட்ரிகோ டூர்ட்டேயினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

Next Post

கர்ப்பிணி பெண்ணின் விபரீத முடிவு -வெளிநாட்டில் கணவர்...

Tue Jun 15 , 2021
Post Views: 386 கேகாலையில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கிணற்றில் குதித்தமையினால் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரம்புக்கன, பத்தம்பிட்டிய பகுதியை சேர்ந்த சதாசிவம் ஸ்ரீகுமாரி என்ற 28 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொள்ள முயன்றுள்ளார். குறித்த பெண் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இல்லாமையினால் உறவினர்கள் அவரை தேட ஆரம்பித்துள்ளனர். இதன் போது அந்த பெண் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து கிடந்ததனை […]

Today Political Cartoons of Sri Lanka