பெண் ஊழியர் ஒருவரால் சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்!!!

கண்டி பஹிரவகந்த பிரதேசத்தில் அமைந்துள்ள மிட்டாய் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பயிற்சி பெற்று வரும் சிறுவன் ஒருவனை கொடூரமாக தாக்கி அவரிடம் தவறாக நடந்துகொண்ட சந்தேகத்தின் பேரில் குறித்த நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கண்டி கெடவல விசேட தேவையுடைய குழந்தைகளுக்கான அரச தொழில் பயிற்சி நிறுவனத்தினால் குறித்த சிறுவன் அந்த நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான். அத்தோடு குறித்த மிட்டாய் உற்பத்தி நிறுவனத்திற்கு இவ்வாறு 03 சிறுவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குறித்த சிறுவர்களை வீடுகளுக்கு செல்ல விடாமல் நாளாந்தம் கொடூரமாக தாக்கி பணியில் ஈடுபடுத்தியதாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு குறித்த பெண் ஊழியர் அவரது பாலியல் ஆசையை தீர்த்துக் கொள்வதற்காக குறித்த சிறுவர்களை பலவந்தப்படுத்தியுள்ள நிலையில்இ அதற்கு இணங்காத சிறுவர்களை கொடூரமாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இவ்தாக்குதலுக்கு உள்ளான மேலும் இரண்டு சிறுவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அத்தோடு தப்பிச் சென்ற சிறுவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய நிறுவனத்தில் இருந்த மற்றைய சிறுவனின் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் கண்டி பொலிஸார் குறித்த இடத்தை சோதனையிட்டுள்ளனர்.

மேலும் இதன்போதுஇ மீட்கப்பட்ட சிறுவன் வைத்திய பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளான். கைது செய்யப்பட்ட 41 வயதுடைய பெண்ணுக்கு மேலதிகமாக குறித்த மிட்டாய் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் சிறுவர்களுக்கு தவறான படங்களை காண்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நேற்று செவ்வாய்க்கிழமை காலை மிட்டாய் நிறுவனத்தின் உரிமையாளர் பொலிஸில் சரணடைந்துள்ள நிலையில் அவருக்கு எதிராக பெண் துஸ்பிரயோக வழக்கு ஒன்று தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Next Post

வாட்ஸ் ஆப்பிற்கு நிகரான செயலியை உருவாக்கிய 15 வயதேயான யாழ்.மாணவன்: குவியும் பாராட்டுக்கள்!!

Wed Jun 30 , 2021
Post Views: 307 வாட்ஸ் ஆப்பிற்கு நிகரான எம்எஸ்குயேட்(mSQUAD) எனும் புதிய செயலியை உருவாக்கி யாழ். மாணவன் ஒருவர் சாதனை படைத்துள்ளார். குறித்த மாணவன் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் தரம் 10 ல் கல்வி பயிலும், இணுவிலில் வசிக்கும் நக்கீரன் மகிழினியன் என்பவராவார். மேற்படி மாணவன் கடந்த பயணத்தடையின் போது வீட்டிலிருந்த காலப்பகுதியை குறித்த முயற்சிக்குப் பயன்படுத்தியதாகவும் தனக்கு இந்த முயற்சி வெற்றியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Today Political Cartoons of Sri Lanka