4 மாத பயணக்கட்டுப்பாடு அல்லது கடுமையான ஊரடங்கு சட்டம் – பிரதி சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை….

4 மாதங்களுக்கு பயண கட்டுப்பாடுகளை நீடிப்பது அல்லது கடுமையான ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி கடுமையான சட்டத்தை செயற்படுத்த நேரிடும் என பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார்.

பயண கட்டுப்பாடுகளை பொதுமக்கள் புறக்கணித்து செயற்பட்டால் இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான சட்டத்திட்டங்களை விதித்து கோவிட்டை கட்டுப்படுத்துவதற்கு முயற்சித்தால், அதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு மிக அதிகம் என அவர் கூறியுள்ளார்.

தொற்றினை கட்டுப்படுத்துவதென்றால் என்றால் அனைவரும் பயணக்கட்டுப்பாடினை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார பாதிப்பை குறைத்து, சீரான முறையில் வைரஸைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், பாரிய அளவிலான மக்கள் கட்டுப்பாடுகளை புறக்கணித்து செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமையால் வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு இருந்த காலப்பகுதியை அதிகரித்துள்ளது. வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றம் சென்று கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது. மக்களே சரியான முறையில் செயற்பட வேண்டும். எதிர்வரும் காலங்களில் நிலைமை தொடர்ந்தால் கடுமையான சட்டத்தின் கீழ் இதனை கட்டுப்படுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Next Post

போதையில் மது என நினைத்து பருகிய அமிலத்தால், குடும்பஸ்தர் ஒருவர் மரணம்..!

Wed Jun 16 , 2021
Post Views: 518 லொறியொன்றின் பெட்ரி செயலிழந்ததால் அந்த பெட்ரியின் அமிலத்தை மது என நினைத்து போதையில் பருகிய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் காலி- பட்டதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடையவர் என்றும் இவர் வாகனங்கள் திருத்துமிடம் ஒன்றின் உரிமையாளர் என்றும் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் வாகன திருத்துமிடத்துக்கு லொறியொன்றின் பெட்ரி அமிலத்தை மாற்றுவதற்கு வருகைத் தந்த மூவருடன், இந்த நபர் மதுபானம் அருந்தியுள்ளார். இதன்போது தவறுதலாக […]

Today Political Cartoons of Sri Lanka