தனிமைப்படுத்தல் விதிகளை மீறி தனியார் வகுப்பு – 31 பேருக்கு கொரோனா தொற்று….

கட்டுகஸ்தோட்டைப் பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி நடத்தப்பட்டு வந்த தனியார் வகுப்பில் இருந்த 58 பேரில் 31 பேருக்கு கொவிட் -19 தொற்று உறுதியாகியுள்ளது.

கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து கட்டுகஸ்தோட்டைஇ ரனவன வீதியில் தங்குமிடத்துடன் நடத்தப்பட்ட தனியார் வகுப்பொன்றை பொலிஸார் முற்றுகையிட்டனர்.

அங்கு 52 மாணவஇ மாணவிகள் கல்வி பயின்று வந்துள்ளனர். க.பொ.த. உயர்தர வகுப்பில் சித்தியடையாத மாணவர்கள் சிலருக்கே இவ்வாறு பெற்றோரின் அனுமதியுடன் தங்கவைக்கப்பட்டு வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்துள்ளன.

அதில் ஒரு மாணவனுக்கு சுகயீனம் ஏற்பட்டதன் விளைவாக அவர் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டபோது கொவிட் தொற்று உறுதியானது.

இதனையடுத்து பொலிசாரும் சுகாதார அதிகாரிகளும் இணைந்து மேற்படி இடத்தை முற்றுகையிட்டனர். இதன்போது அங்கு 52 மாணவர்கள் தங்கி கல்வி கற்ற விடயம் தெரியவந்தது.

52 மாணவர்களும் 6 ஆசிரியர்களுமாக 58 பேரும் அவ்விடத்திலே தனிமைப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் பீ.சீ.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவர்களில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

Next Post

யாழ்ப்பாணத்தில் சாவற்காடுக் கிராமம் தனிமைப்படுத்தலில்...

Wed Jun 16 , 2021
Post Views: 380 யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட J/ 131 சாவற்காடு கிராமம் இன்று புதன்கிழமை(16) பிற்பகல் முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். சாவற்காடுக் கிராமத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பி சிஆர் பரிசோதனைகளின் போது அதிகளவானோர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானதையடுத்து மேற்படி பகுதியினை முடக்குவதற்குச் சுகாதாரப் பிரிவினர் சிபார்சு செய்ததையடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Today Political Cartoons of Sri Lanka