சட்டவிரோத நடவடிக்கைககளில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டால் பிணை இல்லை…..

நாட்டில்பயணக்கட்டுப்பாடு நேற்று(23) இரவு 10 மணிமுதல் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு கைது செய்யப்படுபவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர்இ சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை இன்று (24) தெரிவித்தார்.

கைது செய்யப்படுபவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

அத்துடன், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் அசையும்இ அசையா சொத்துகள் பறிமுதல் மற்றும் சீல் வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பௌர்ணமி தினமான இன்று மக்கள் வீடுகளிலேயே இருந்து தனிமைப்படுத்தல் விதிகளுக்கு மதிப்பளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

Next Post

யாழில் 6 மாத சிசு மற்றும் இரு சிறுவர்களுக்கும் கொரோனா தொற்று...!!

Sat Jun 26 , 2021
Post Views: 287 யாழ்.பருத்தித்துறை – தும்பளை பகுதியில் 6 மாத குழந்தை மற்றும் 9 வயது சிறுவனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சளி காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக சென்ற 13 வயதுச் சிறுமிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடன் நேரடித் தொடர்பு கொண்ட குடும்பத்தினருக்கு நேற்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 6 மாத குழந்தை மற்றும் 9 […]

Today Political Cartoons of Sri Lanka