LTTE இன் முன்னாள் உறுப்பினர்கள் உட்பட 93 கைதிகள் விடுதலை..!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் உட்பட 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொதுமன்னிப்பின் கீழ் அவர்கள் இன்று (வியாழக்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேரைத் தவிர்த்து சிறிய குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 77 பேரும் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நீண்ட காலம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 17 பேரை விடுதலை செய்வதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்திருந்தார்.

அதன்படி, விடுதலை செய்யக்கூடிய 17 சந்தேகநபர்களின் பெயர் பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

பொசன் பூரணையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் இவர்களை விடுதலை செய்ய முடியும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

திருமணம் செய்தவருக்கு 20ஆயிரம் தண்டம் விதித்தது மல்லாகம் நீதிமன்றம்..!!

Thu Jun 24 , 2021
Post Views: 455 பண்டத்தரிப்பு பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி திருமணம் செய்த மணமகனுக்கு மல்லாகம் நீதிமன்றம் 20ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பண்டத்தரிப்பு பகுதியில் கடந்த 4ஆம் திகதி திருமண நிகழ்வு நடைபெற்றது. இதன் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது, அதிகளவானோர் திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். இது தொடர்பில் சுகாதார பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை […]

Today Political Cartoons of Sri Lanka