பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர்! ஒரே ஒரு வீடியோவால் வந்த வினை..!!

இந்திய மாநிலம் கேரளாவில் சமூக ஊடகங்களில் பதிவேற்றிய வீடியோவிற்கு பொதுமக்களின் கருத்துக்களால் இளைஞரை கொலைக்கு தூண்டியுள்ளது.

கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த 28 வயது ஆதிரா என்பவரேஇ தீ காயங்களால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இவ் விவகாரம் தொடர்பில் ஆதிராவின் தாயார் அம்பிளி அவர்கள் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஆதிராவுடன் வசித்து வந்த ஷானவாஸ் என்பவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வீடியோ பதிவேற்றம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் ஆதிரா. இவருடன் இணைந்தும் தனியாகவும் ஷானவாஸ் வீடியோ பதிவேற்றி வந்துள்ளார்.

இதில் ஆதிரா பதிவேற்றிய வீடியோவிற்கு பொதுமக்களில் ஒருவர் அளித்த கருத்தால் இந்த தம்பதிகளுக்கு இடையில் வாக்குவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ஷானவாஸ் ஆதிரா மீது பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்துள்ளார்.

அது மட்டுமின்றிஇ தானும் தீ கொளுத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இருவரையும் மீட்டு அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி ஆதிரா மரணமடைந்துள்ளார். ஆபத்து கட்டத்தை தாண்டிய நிலையில் ஷானவாஸ் பொது அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில்இ ஆதிரா தனது தாயாரிடம் தெரிவித்திருந்த தகவலை அவர் வாக்குமூலமாக பொலிசாரிடம் தெரிவிக்கஇ தற்போது ஷானவாஸ் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆதிராவும் ஷானவாசும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 3 மாதமேயான ஒரு குழந்தை உள்ளது.

ஆதிரா ஏற்கனவே திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளுக்கு தாயார் எனவும், ஷானவாசுக்கும் முதல் திருமணத்தில் இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Next Post

எரிபொருட்களின் விலை உயர்வு பற்றி வெளியான தகவல்..!!

Sun Jun 13 , 2021
Post Views: 344 இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை உயர்வு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் எரிபொருட்களின் விலையேற்றம் மட்டத்தில் வைத்திருப்பதற்காகவும் , வெளிநாட்டு ஒதுக்கங்களின் நிலைத்தன்மையை பேணுவதற்காகவும் மற்றும் பொதுமக்களின் சுகாதார நலன்களை மேற்கொள்வதற்காகவும் நடைமுறைப்படுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எரிபொருள் விலையேற்றம்இ அரசாங்கத்தை சங்கடத்துக்கு உள்ளாக்கும் நடவடிக்கை என குற்றம் சுமத்தியிருத்த ஜனாதிபதியில் அங்கம் வகிக்கும் பொதுஜன பெரமுனாவின் செயலாளர் சாகர […]

Today Political Cartoons of Sri Lanka