இன்று முதல் பாண் விலை அதிகரிப்பு – வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு..!!!

எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக அனைத்து வெதுப்பக உணவு உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில்இ இன்று முதல் பாண்இ பனிஸ் உட்பட வெதுப்பக உணவுகளின் அனைத்து விலைகளும் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்இ பெரும் பிரச்சினைகள் இருக்கும் போது அரசாங்கம் எரிபொருள் விலைகளை அதிகரித்தது.

அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகள் காரணமாக சகல பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும். அரசாங்கம் பாம் ஒயிலை தடை செய்தது.

அதன் விலையும் அதிகரித்தது. ஒரு வருடத்திற்கு முன்னர் 20 லீற்றர் தேங்காய் எண்ணெயின் விலை 4800 ரூபா.

தற்போது அதன் விலை 13500 ரூபா. வெதுப்பக உணவுகளில் 30 வீதமான உணவுகள் பாண் முச்சக்கரவண்டிகள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன.

பெட்ரோல் விலை அதிகரிப்பை நாங்கள் எப்படி தாங்கி கொள்வது. எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால்இ வெதுப்பக உரிமையாளர்கள் தமது உணவுகளை தாம் விரும்பிய விலைக்கு அதிகரிப்பார்கள்.

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டால், வெதுப்பக உணவுகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும். உப்பு கல் முதல் அனைத்து பொருட்களும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இவற்றை வெதுப்பக உரிமையாளர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை எனவும் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Next Post

இந்தியாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை- மீட்கும் பணி தீவிரம்...

Mon Jun 14 , 2021
Post Views: 549 உத்தரப்பிரதேசம்- ஆக்ரா, தாராயாய் கிராமத்தில் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று (திங்கட்கிழமை) காலை, விளையாடிக்கொண்டிருந்த குறித்த குழந்தை தவறுதலாக ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளது. இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக பதேஹாபாத்திலுள்ள நிபோஹாரா பொலிஸ் நிலையத்துக்கு சம்பவம் தொடர்பாக தகவல் வழங்கியுள்ளனர். குறித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த […]

Today Political Cartoons of Sri Lanka