ஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட இரு சிறுவர்கள் கைது – வாழைச்சேனையில் சம்பவம்..!!

மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்&nbsp, செய்ய முற்பட்ட 12, 14 வயதுடைய இரு சிறுவர்களை நேற்று திங்கட்கிழமை (14.06.2021) இரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிராமம் ஒன்றில் சம்பவதினமான நேற்று மாலை, குறித்த  வீட்டின் தாயார் அருகிலுள்ள வீடு ஒன்றுக்கு சென்ற நிலையில் குறித்த சிறுமி வீட்டில் தனிமையில் இருந்தபோது அந்த பகுதியைச் சேர்ந்த 12, 14 வயதுடைய இரு சிறுவர்கள் வீட்டினுள் புகுந்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதனையடுத்து, சிறுமி பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கதியை தெரிவித்ததையடுத்து, அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த இரு சிறுவர்களையும் பொலிசார் கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

Next Post

கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகளால் முதல் மரணம் - இந்தியா...

Tue Jun 15 , 2021
Post Views: 343 இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,95,70,881 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் 2726 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,77,031 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா […]

Today Political Cartoons of Sri Lanka