சற்று முன் கிடைத்த தகவல் – மேலும் சில மாதங்கள் இலங்கையை முழுமையாக முடக்கும் நிலை – பிரதி பொலிஸ்மா அதிபர்…

நாட்டை மேலும் சில மாதங்களுக்கு முழுமையாக மூட வேண்டிய நிலை ஏற்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு நாடு முடக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் செய்ய முடியாமல் போன அனைத்து விடயங்களையும் ஏனைய நாட்டைகளை போன்று செய்துக் கொள்ள முயற்சித்தால் இந்த நிலைமை ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

இந்த வருட கடைசி வரை சிறியளவில் வேலை செய்துக் கொண்டிருப்பதா அல்லது இரண்டு வாரங்களில் மீண்டும் நாட்டை மூடி வைப்பதாக என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

பயணக்கட்டுப்பாடு காலப்பகுதியில் அத்தியாவசிய சேவை கடிதம் அனுப்பி அத்தியாவசிய சேவையற்ற பலரை பணிக்கு அழைக்க நிறுவனங்களின் தலைவர்கள் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

இம்முறை அவ்வாறான நிலைமைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Next Post

யாழில் இளம் யுவதி தற்கொலை..!!

Tue Jun 22 , 2021
Post Views: 2,991 யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் வசித்து வந்த இளம் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. 17 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில், குறித்த யுவதியின் தற்கொலைக்கான காரணம் தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Today Political Cartoons of Sri Lanka