திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் குருநகரில் தனிமைப்படுத்தப்பட்டனர்..!!!

அனுமதிக்கும் அதிகமாக பலர் திருமண நிகழ்வில் கூடியதால் குருநகர் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் இன்றைய தினம் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இன்று குருநகர் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட யாழ்ப்பாண பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது அதிகளவானவர்கள் திருமண நிகழ்வில் பங்குபற்றியதை அவதானித்து யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அறிவித்தனர்.

இதனையடுத்து அங்கு வந்த யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் 15 பேருக்கும் அதிகளவானவர்கள் திருமண நிகழ்வில் பங்குபற்றியதை உறுதிப்படுத்தி அவர்களை தனிமைப்படுத்தினர்.

நாடு முழுவதும் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 15 பேருக்கு உட்பட்டு திருமணப் பதிவை மேற்கொள்ள முடியும் என அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் அதற்கு மேலதிகமாக அங்கு பலரும் ஒன்று கூடியதால் தனிமைப்படுத்தியதாக யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்தனர்.

Next Post

பயணக்கட்டுப்பாடு மேலும் சில காலங்களிற்கு நீடிப்பா ???

Mon Jun 14 , 2021
Post Views: 467 நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளை மேலும் சில காலங்களிற்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். எனினும் விசேட வைத்திய நிபுணர்களின் தீர்மானங்களுக்கு அமையவே பயணக்கட்டுப்பாடுகளை தொடர்வதா?இ இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். அதேவேளை பயணக்கட்டுப்பாடு காரணமாக கொரோனா மரணங்களும் நோயாளர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிந்தாலும் குறித்த எண்ணிக்கையில் பாரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். […]

Today Political Cartoons of Sri Lanka