15 வயது சிறுமி பணத்துக்காக விற்பனை – தாய் உட்பட 19 பேர் கைது..!!

கல்கிசையில் 15 வயதான சிறுமி ஒருவர், பணத்துக்காக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவரது தாய் உள்ளிட்ட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணையத்தளம் ஊடாக, குறித்த சிறுமி விளம்பரப்படுத்தப்பட்டு, பலருக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக, கல்கிசை தலைமையக காவல்நிலையத்துக்கு தெரியவந்திருந்தது.

இதுதொடர்பாக விசேட காவல்துறை குழு ஒன்று விசாரணைகளை ஆரம்பித்தது.

இதன்படி குறித்த சிறுமியை விற்பனை செய்ய முயற்சித்த 54 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணைகளின் படி, குறித்த நபர் கடந்த 3 மாதங்களில் அந்த சிறுமியை 30 பேரிடம் விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

சிறுமி தொடர்பான விளம்பரத்தில் 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபா வரையில் விலை கோரப்பட்டிருந்தது.

இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைத்த சிற்றுந்து மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Post

மீண்டும் பயணத்தடையா? 05ஆம் திகதிக்குப் பின் தீர்மானம்..!!!

Wed Jun 30 , 2021
Post Views: 383 நாடு முழுவதிலும் பயணக்கட்டுப்பாடுகளை மீண்டும் விதிப்பதா இல்லையா என்பது குறித்த பேச்சுவார்த்தை அடுத்தவாரத்தில் நடைபெறவுள்ளது. கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்தார். கடந்த ஒருமாதகாலமாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை காரணமாகேவே இன்று நாளாந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை விட குறைந்திருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய நிலையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி […]

Today Political Cartoons of Sri Lanka