சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை….!!!

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாதவர்களுக்காக நடைமுறையில் விதிக்கப்படும், 5,000 ரூபா அபராதத் தொகையை, வர்த்தமானி அறிவித்தல் மூலமாக 50 ஆயிரம் ரூபாவாக அதிகரித்தாவது கொவிட் ஒழிப்பு இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் 250 மில்லியன் ரூபா செலவில் களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆய்வுகூட திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்தோடு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாதவர்களுக்கெதிராக சுகாதார அமைச்சு மற்றும் காவல்துறையினர் ஒன்றிணைந்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Next Post

சீனர்களின் மற்றுமொரு திருட்டுத்தனம் அம்பலம் - கையும் களவாக சிக்கினார்கள்..!!

Wed Jun 23 , 2021
Post Views: 359 இலங்கையில் அண்மையில் சீன பிரஜைகள் கடனட்டை விவகாரத்தில் சிக்கியத்தைத் தொடர்ந்து, மீண்டும் மற்றுமொரு விவகாரத்தில் பொலிசாரிடம் சிக்கியுள்ளனர். தற்போது உபகரணங்கள் என தெரிவித்து, சீனாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குக் இறக்குமதி செய்யப்பட்ட 20.4 மில்லியன் ரூபாய் சிகெரட்டுகள் இன்று புதன்கிழமை , கொழும்பு துறைமுகத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன. 40 அடி நீளமான 2,76,000 சிகெரட்டுகள், 60 பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பிரிவு […]

Today Political Cartoons of Sri Lanka