இணையவழி மதுபான விற்பனை – கொவிட் கட்டுப்பாட்டு மையத்தின் அதிரடி அறிவிப்பு…!!

இணையவழி ஊடாக மதுபானங்களை விற்பனை செய்வதற்கு கோவிட் தடுப்புச் செயலணி அனுமதி மறுத்துள்ளது என அதன் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

பயணக் கட்டுப்பாட்டால் நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் இணையம் ஊடாக மதுபானங்கள் விற்பனை செய்வதற்குக் கலால் திணைக்களம் திட்டமிட்டது.

இதற்கு நிதி அமைச்சும் கொள்கை ரீதியில் அனுமதி வழங்கியது.

எனினும், இந்தத் திட்டத்துக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உட்பட பல தரப்புகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டன.

இதனையடுத்து கோவிட் தடுப்புக்கான செயலணி அனுமதி வழங்கினால் மட்டுமே குறித்த சேவை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும், அதற்கான அனுமதியை வழங்க குறித்த செயலணி மறுத்துள்ளது.

Next Post

சஜித் தரப்பினர் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்..!!

Thu Jun 17 , 2021
Post Views: 280 எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக கினிகத்தேனையில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலர், இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பதாதைகளை ஏந்தியவாறு எதிர்ப்பில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், அரசாங்கம் பொதுமக்களுக்கு எரிபொருள் நிவாரணத்தை வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Today Political Cartoons of Sri Lanka