எதிர்வரும் 21ம் திகதி காலை 4 மணிக்கு பயணத் தடை தளர்த்தப்பட்டு, மீண்டும் 28ஆம் திகதி வரை நீடிப்பு!!!

நாட்டில் அமுலில் உள்ள பயணத் தடை 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும், இடையில் சில தளர்வுகள் விடப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எதிர்வரும் 21ம் திகதி அதிகாலை 4 மணிவரை நடைமுறையில் உள்ள பயணத்தடை 21ம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டு 21ம் திகதி நள்ளிரவு 11 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படுகிறது.

அதேவேளை, 25ம் திகதி அதிகாலை 4 மணிவரை அமுலில் இருக்கும் எனவும் பின் 25ம் திகதி இரவு 11 மணிக்கு மீண்டும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டு 28ம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் எனவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இது தொடர்பான தகவல்கள் இன்னமும் இராணுவ தளபதி தரப்பிலிருந்து உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் பயணத் தடையை நீக்க வேண்டாம் என்று சுகாதாரப் பிரிவினர் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்துவருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Next Post

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி பெண் பலி!

Wed Jun 16 , 2021
Post Views: 1,509 கிரான்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். விவசாய காணிக்கு நீர் பாய்ச்சுவதற்காக மின்சாரத்தை பயன்படுத்த முற்பட்டபோது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. சம்பவத்தில் 4 பிள்ளைகளின் தாயான 49 வயதான பெண்ணொருவரே இவ்வாறு மரணித்ததாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Today Political Cartoons of Sri Lanka