வடக்கில் கட்டுப்பாடுகளை உதாசீனம் செய்யும் மக்கள்; இனி இதற்கு அனுமதியில்லை!

வடக்கில் வரையறுக்கப்பட்ட திருமண நிகழ்வுகளிற்கு வழங்கப்படும் அனுமதியை தற்காலிகமாக நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வடமாகாண ஆளுனரினால் விடுக்கப்பட்ட பணிப்புரைக்கமையஇ சுகாதார அதிகாரிகள் இந்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக்காலமாக திருமணங்கள் மூலமாகவே கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளதையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வுகளிற்கு மணமக்கள் உள்ளிட்ட 15 பேருக்கு சுகாதாரத்துறையினர் அனுமதி வழங்கி இருந்தபோதும்இ பொதுமக்கள் அதனை கணக்கிலெடுக்காது செயல்ப்பட்டு வருகின்றனர்.

அத்துடன் அண்மைய நாட்களாக திருமண வீடுகளில் இரகசியமாக கூடியவர்களால் கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளதையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும்இ அதன்படி பயணத்தடை நீக்கப்படும் வரை இந்த தீரமானம் நடைமுறையில் இருக்கும் எனவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Next Post

பெயர்தான் பிள்ளையார்- ஆனால் உள்ளேயிருந்தது???

Sat Jun 19 , 2021
Post Views: 427 பிள்ளையார் என பெயர் பொறிக்கப்பட்டிருந்த லொறியில் இருந்து மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நெடுந்தீவிலிருந்து கடத்தப்பட்ட 18 கிலோகிராம் மாட்டிறைச்சியுடன் இரு நபர்கள் புங்குடுதீவில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு பாடசாலையொன்றின் திருத்த பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனமொன்றின் வாகனத்தில் சட்டவிரோதமாக மாட்டிறைச்சியை கடத்திச் செல்லவுள்ளதாக நெடுந்தீவிலிருந்து தீவக சிவில் சமூக உறுப்பினர்களுக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது . […]

Today Political Cartoons of Sri Lanka