மாணவர்களுக்கு Data கட்டணம் இன்றி வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக கல்வி வசதி – நாமல் ராஜபக்க்ஷ அறிவிப்பு..!!

எந்தவொரு Data தரவுக் கட்டணமும் இன்றி வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி வசதிகளை வழங்கும் முறையொன்று இம் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

இதேபோன்று, எல்.எம்.எஸ் முறையின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகளுக்குரிய திட்டம் ஜூன் மாதம் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 4G தொழில்நுட்பத்துடன் 10,000 பாடசாலைகளை மேம்படுத்தும் திட்டங்கள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரமும் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், கல்வியை அணுகுவதில் கிராமப்புறங்களில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

அத்துடன், சரியான திட்டமின்றி சில பகுதிகளில் தொலைபேசி நிறுவனங்களால் தொலைபேசி கோபுரங்கள் கட்டப்படுவதால் இந்த பிரச்சினைகள் எழுந்துள்ளது என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

Next Post

கொரோனாவுக்கு மேலும் 71 பேர் பலி..!!

Tue Jun 22 , 2021
Post Views: 498 நாட்டில் மேலும் 71 கோவிட் தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளன. அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நேற்றைய தினம் (21-06-2021) உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 71 என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் இதுவரையில் 2704 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் 30 வயதுக்கும் குறைந்த ஒரு மரணமும், 30 முதல் 59 வயது […]

Today Political Cartoons of Sri Lanka