மயங்கி வீழ்ந்த வீரர்! அதிர்ச்சியில் ரசிகர்கள் (கால்பந்தாட்ட போட்டி நிறுத்தம்)

ஐரோப்பா கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் இடம்பெற்று வரும் நிலையில்இ டென்மார்க் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென மைதானத்தில் மயங்கி வீழ்ந்த நிலையில் பதற்றமான நிலை ஏற்பட்டு போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.

டென்மார்க் மற்றும் பின்லாந்து ஆகிய கால்ப்பந்தாட்ட அணிகள் இன்று மோதின. கோபன்ஹேகனில் நடந்த இந்த போட்டியின் போது கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென மைதானத்தில் மயங்கி வீழ்ந்துள்ளார்.

அவர் அசைவற்று இருந்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. உடனடியாக செயற்பட்ட வைத்தியர்கள் அவரை சிகிச்சை அளித்தனர். பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஐரோப்பா கிண்ண கால்பந்து போட்டிகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன . இந்த போட்டியில் மொத்தமாக 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்த நாடுகளின் அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன.

இதன்படிஇ இன்றைய போட்டியில் டென்மார்க்-பின்லாந்து அணிகள் மோதிக்கொண்டன . முதல் பாதி ஆட்டம் நிறைவடைய சில நிமிடங்கள் இருக்கின்ற போது கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென மைதானத்தில் மயங்கி வீழ்ந்துள்ளார்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டன. எவ்வாறாயினும் அவர் தற்போது கண் விழித்திருப்பதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் போட்டியை மீண்டும் தொங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானிய நேரம் 07.30 மணியளவில் போட்டி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளின் வீரர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து போட்டியை மீண்டும் நடத்த ஒப்புக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

கொவிட் 19 மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் ?

Sun Jun 13 , 2021
Post Views: 242 மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதால் ஏற்பட்ட கால தாமதமும் மற்றும் மரண சான்றிதழ்கள் வழங்கி மரண நடவடிக்கைகளை நிறைவு செய்வதில் ஏற்பட்ட தாமதங்களால் கொவிட் மரணங்கள் தொடர்பான அறிக்கைகள் தாமதமாக வெளியிடப்படுகின்றன என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக நாளாந்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததிற்கான காரணத்தை தெளிவுபடுத்திய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் […]

You May Like

Today Political Cartoons of Sri Lanka