இலங்கையில் கடந்த 10 நாட்களில் 531 கொரோனா மரணங்கள்..!!

இலங்கையில் கடந்த 10 நாட்களில் 531 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று தேசிய தொற்றுநோய் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 16ஆம் திகதியிலிருந்து 25ஆம் திகதிவரை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன உறுதிப்படுத்திய தினசரி கொரோனா மரணங்களின் அறிக்கைகளுக்கு அமைவாக இந்த எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக கடந்த 10 நாட்களில் 229 பெண்களும், 302 ஆண்களும் கொரோனாத் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

அவர்களில் 30 வயதுக்கு மேற்பட்ட 9 பேர் மரணமடைந்துள்ளனர். அதேவேளை, 30 – 59 வயதுக்கு இடைப்பட்ட சுமார் 103 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 419 பேரும் மரணமடைந்துள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி 71 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிசெய்யப்பட்டன.

இது நாட்டில் ஒரே நாளில் பதிவான அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் என்று தேசிய தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

Next Post

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை தொடர்பில் வெளியான அறிவிப்பு..!!

Sun Jun 27 , 2021
Post Views: 383 மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் நிலைமைக்கமைய இந்த தடை தொடர்ந்து நீடிக்கும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மாகாணங்களுக்கு இடையில் பொது போக்குவரத்து பயணிப்பதற்கு அனுமதி வழங்குவதற்கு தொடர்ந்து வாய்ப்புகள் இல்லை என கொவிட் தடுப்பு தெரிவித்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் வாரமும் போக்குவரத்து நடவடிக்கை மாகாணங்களுக்குள் மாத்திரமே இடம்பெறும் என […]

Today Political Cartoons of Sri Lanka