வீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் – யாழில் சம்பவம்..!!

வீதியால் பயணிப்போரை கருங்குளவிகள் மற்றும் காகங்கள் என்பன துரத்தித் தாக்குவதாகவும் அதனால் குறித்த வீதியால் தாம் செல்ல அச்சம் கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி – தனங்களப்பு வீதியிலையே இச்சம்பவம் இடம்பெற்று வருகின்றது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது குறித்த வீதியை தென்மராட்சி தெற்கு பிரதேசத்திற்கு செல்லும் மக்களும் சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் – மன்னார் (ஏ -32) பிரதான வீதிக்கு செல்வோரும் பயன்படுத்தி வருகின்றனர்.

வீதியோரத்தில் காணப்படும் பனங்கூடல் மற்றும் எருக்கலை பற்றை காடுகளினுள் கருங்குளவிகள் மற்றும் காகங்கள் என்பன கூடு கட்டியுள்ளன. அவை வீதியில் செல்வோரை துரத்தித் துரத்தித் தாக்குகின்றன. அதனால் பலர் அச்சம் காரணமாக அவ்வீதியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வருகின்றனர்.

கைக்குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் நேற்றைய தினம் பயணித்த தம்பதியினரை காகங்கள் துரத்தித் துரத்தித் தாக்கியுள்ளன. அவர்கள் தலைக்கவசம் அணிந்திருமையால் பெரியளவிலான காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குறித்த வீதியில் மாலை நேரங்களில் சிலர் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாகவும் தற்போது கருங்குளவிகள் காகங்களின் தாக்குதல் அச்சம் காரணமாக அவர்கள் நடைப்பயிற்சியில் ஈடுபடுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Next Post

100 கர்ப்பிணிகள் 50 தாய்மாரை குறி வைத்துள்ள கொரோனா..!!

Sat Jun 26 , 2021
Post Views: 509 நாடளாவிய ரீதியில் சுமார் 100 கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 50 பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றதாக குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் இயக்குநர் டாக்டர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார். எனினும் கொரோனா தொற்றுநோயால் 11 தாய்மார்கள் உயிரிழந்து விட்டதாகவும் அவர் கூறினார் இந்த நிலையில் கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக […]

Today Political Cartoons of Sri Lanka