கொழும்பில் கொவிட் தொற்றிய குழந்தைகளுக்கு புதிய நோய் – 6 சிறுவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில்..!!

கொவிட் நோயுடன் தொடர்புடைய மிகவும் ஆபத்தான நோய் ஒன்று சிறுவர்களுக்கு பரவுவதாக பொரளை ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துன்னார்.

இதுவரையில் அவ்வாறான நோயினால் பாதிக்கப்பட்ட 6 சிறுவர்கள் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்களுக்கு கொவிட் தொற்றி 14 நாட்களின் பின்னரே இந்த பிரச்சினை ஏற்படுகின்றது. விசேடமாக 5- 15 வயதிற்குட்பட்டவர்களுக்கே இந்த நிலைமை ஏற்படுகின்றது. இதனை பல உறுப்பு நோய்த்தொற்று என அழைக்கப்படுகின்றது.

வயிற்று வலி, காய்ச்சல், வாந்தி, கண் சிவத்தல், உதடு மற்றும் நாக்கு சிவத்தல், உடல் வலிகள் போன்ற விடயங்களே இதன் அறிகுறிகளாகும். இதயத்தை பாதித்து இரத்த அழுத்தத்தை குறைத்து பிள்ளைகள் உயிரிழக்கும் நிலைக்கு செல்வதே இந்த நோயின் ஆபத்தான நிலைமை என குறிப்பிடப்படுகின்றது.

இந்த நோய் நிலைமை 2020ஆம் திகதி பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற இந்த நோய் ஏற்பட்டு பிள்ளைகள் உயிரிக்கின்றனர். இந்த நோயினால் பாதிக்கப்பட்ட இலங்கை சிறுவர்கள் தீவர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறும் 6 பேரும் கொழும்பை சுற்றியுள்ள பிரதேசங்களை சேர்ந்தவர்களாகும். பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வெளியே கொண்டு செல்ல வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Next Post

ஒரு மாதத்தின் பின்னர் முழுமையாக திறக்கப்பட்ட இலங்கை - மக்களுக்கு எச்சரிக்கை....

Mon Jun 21 , 2021
Post Views: 337 நாடாளவிய ரீதியில் கடந்த ஒரு மாத காலமாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு இன்று (21) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 23ம் திகதி இரவு 10 மணி வரை இந்த பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதுடன், 23ம் திகதி இரவு 10 மணி முதல் மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளது. 23ம் திகதி இரவு 10 மணி முதல் எதிர்வரும் 25ம் திகதி […]

Today Political Cartoons of Sri Lanka