டெல்டாவுக்காக நாட்டை முடக்க முடியாது! ஆனால் பேரழிவு என்பதை ஏற்றுக்கொள்கிறோம் – இராணுவத் தளபதி எச்சரிக்கை..!!

மருத்துவர்கள், சுகாதார நிபுணர்களின் வேண்டுகோளின்படி ‘டெல்டா’ கோவிட் வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக முழு நாட்டையும் தொடர்ந்து முடக்கி வைத்திருக்க முடியாது என கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாடு தழுவிய பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் மக்கள் பொறுப்பின்றி நடந்தால் இந்தியாவின் நிலைமைதான் இங்கு ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

“இந்தியாவில் ‘டெல்டா’ கோவிட் வைரஸ் ஏற்படுத்தும் கொடூர தாக்கங்களை நாள்தோறும் அறிகின்றோம். எனவே, மக்கள் அனைவரும் சுகாதார விதிமுறைகளைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.

‘டெல்டா’ வைரஸ் கொழும்பு மாவட்டத்தில் தெமட்டகொடை என்ற பிரதேசத்தில் ஒரு பகுதியில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை நாம் எடுத்துள்ளோம்.

ஆனால், அந்த வைரஸ் நாடு முழுவதும் பரவினால் பேரழிவு என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்தால் இந்தப் பேரழிவைத் தடுக்கலாம்.

அதைவிடுத்து முழு நாட்டையும் தொடர்ந்து முடக்கி வைத்திருக்க முடியாது. அன்றாடம் வேலை செய்யும் மக்களைப் பட்டினியால் சாகடிக்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.

Next Post

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை....!!!

Wed Jun 23 , 2021
Post Views: 932 சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாதவர்களுக்காக நடைமுறையில் விதிக்கப்படும், 5,000 ரூபா அபராதத் தொகையை, வர்த்தமானி அறிவித்தல் மூலமாக 50 ஆயிரம் ரூபாவாக அதிகரித்தாவது கொவிட் ஒழிப்பு இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். மேலும் 250 மில்லியன் ரூபா செலவில் களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆய்வுகூட திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்தோடு தொடர்ந்தும் உரையாற்றிய […]

Today Political Cartoons of Sri Lanka