கனடாவில் கோர விபத்து – இலங்கை குடும்பம் ஒன்று பரிதாபமாக பலி..!!

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி இலங்கை குடும்பம் ஒன்று உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கனடாவில் மில்டன், பிரேடானியா வீதியில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 இலங்கையர்கள் உ யிரிழந்துள்ளனர்.

28 வயதுடைய கனடிய இளைஞர் ஓட்டிய கெடிலெக் எனப்படும் வாகனத்தில் இலங்கையர்கள் ஓட்டி சென்ற வாகனம் மோதுண்டமையினால் இவ்வாறு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையை சேர்ந்த அத்துல கருணானந்த என்பவரே இந்த வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அதில் அவரது மனைவியும் மகளும் பயணித்துள்ளனர்.

இந்த விபத்தை ஏற்படுத்திய கனேடிய இளைஞன் குடிபோதையில் இருந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையர்கள் ஓட்டிச் சென்ற வாகனத்திற்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்த மகள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். விபத்திற்கு காரணமாக இருந்த 28 வயதுடைய இளைஞன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த அத்துல கருணானந்த என்பவர் சில வருடங்களுக்கு முன்னர் நாவல ராஜகிரியவில் இருந்து கனடாவுக்கு சென்ற நிலையில் அவரது மகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் இறுதி நடவடிக்கைகள் எதிர்வரும் 27ஆம் திகதி மில்டனில் இடம்பெறவுள்ளது. எனினும் கொரோனா காரணமாக இறுதி சடங்கில் சிறிய அளவிலான மக்களே கலந்து கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Next Post

டெல்டாவுக்காக நாட்டை முடக்க முடியாது! ஆனால் பேரழிவு என்பதை ஏற்றுக்கொள்கிறோம் - இராணுவத் தளபதி எச்சரிக்கை..!!

Wed Jun 23 , 2021
Post Views: 975 மருத்துவர்கள், சுகாதார நிபுணர்களின் வேண்டுகோளின்படி ‘டெல்டா’ கோவிட் வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக முழு நாட்டையும் தொடர்ந்து முடக்கி வைத்திருக்க முடியாது என கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாடு தழுவிய பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் மக்கள் பொறுப்பின்றி நடந்தால் இந்தியாவின் நிலைமைதான் இங்கு ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் […]

Today Political Cartoons of Sri Lanka