தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி….

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார்.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறப்பு சலுகையில் தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல மத்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின், சிறிது காலம் குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது அண்ணாத்த திரைப்படம் உருவாகி உள்ளது. சிவா இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டன.

விரைவில் ரஜினி டப்பிங் பணிகளையும் முடித்துவிடுவார் என கூறப்படுகிறது.

அதேநேரம் அண்ணாத்த படம் வருகிற தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Next Post

இன்று முதல் பாண் விலை அதிகரிப்பு - வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு..!!!

Mon Jun 14 , 2021
Post Views: 376 எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக அனைத்து வெதுப்பக உணவு உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதனடிப்படையில்இ இன்று முதல் பாண்இ பனிஸ் உட்பட வெதுப்பக உணவுகளின் அனைத்து விலைகளும் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்இ பெரும் பிரச்சினைகள் இருக்கும் போது அரசாங்கம் எரிபொருள் விலைகளை […]

Today Political Cartoons of Sri Lanka