மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான தீர்மானம்??

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையை அடுத்து மின்சார கட்டணத்தையும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார பொது சேவையாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

அந்த சங்கத்தில் தலைவர் மாலக்க விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான தேவை இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் எமது செய்திப்பிரிவு, மின் சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தனவை தொடர்புகொண்டு வினவியது.

இதற்கு பதில் அளித்த அவர் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான எந்த ஒரு தீர்மானமும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டார்.

Next Post

இலங்கை உட்பட 7 நாடுகளுக்கு தடை நீடிப்பு...

Tue Jun 15 , 2021
Post Views: 245 இலங்கை உட்பட 7 நாடுகளுக்கு, பிலிப்பைன் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாம்ளம், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு தொடர்ந்தும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக ஆரம்பத்தில் ஏப்ரல் 29 முதல் இந்தியா மீது பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது. பின்னர் […]

Today Political Cartoons of Sri Lanka