மீன் வியாபாரத்தில் ஈடுபட்டவரிடம் பரிதானம் பெற்ற பொலிஸார் – கோப்பாயில் நிகழ்ந்த சம்பவம்….

பயணத்தடை காலப்பகுதியில் அனுமதிப்பதிரத்துடன் வியாபாரத்தில் ஈடுபட்ட மீன் வியாபாரியிடம் பரிதானம் பெற்ற கோப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கோவிட்-19 நோய்த்தொற்று பயணத்தடை காலப்பகுதியில் நடமாடும் மீன் வியாபாரிகளுக்கு நல்லூர் பிரதேச செயலாளரினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது.

அதனைப் பயன்படுத்தி மீன் வியாபாரித்தில் ஈடுபட்ட வியாபாரியை அச்சுறுத்தி கோப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் பரிதானம் பெற்றுள்ளனர்.

பணத்தை வழங்கிய மீன் வியாபாரி தனது பகுதி கிராம அலுவலகர் ஊடாக நல்லூர் பிரதேச செயலாளரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர்மட்டத்துக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக பரிதானம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களை மீன் வியாபாரி அடையாளம் காட்டியுள்ளார்.

மேற்கொண்டு விசாரணைகளை யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கண்காணிப்பில் இடம்பெற்று வருகின்றன

Next Post

யாழின் முக்கிய பகுதி முடக்கம் ; பணியாளர்கள் தனிமைப்படுத்தலில் - அலுவலகம் மூடப்பட்டுள்ளது....

Tue Jun 15 , 2021
Post Views: 536 யாழ்.வலிமேற்கு பிரதேசசபை தலமை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அலுவகம் மூடப்பட்டுள்ளது. தவிசாளர் மற்றும் செயலாளர், உத்தியோகத்தர்கள் என 24 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இங்கு பணியாற்றும் ஒரு உத்தியோகத்தருக்கு கடந்த 2 ஆம் திகதி தொற்று உறுதிசெய்யப்பட்டமையை அடுத்து கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் பணிகள் யாவும் நிறுத்தப்பட்டு அலுவலகம் மூடப்பட்டு 24 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் […]

Today Political Cartoons of Sri Lanka