விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 65 முதல் பார்வை போஸ்டரா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!!!

நடிகர் விஜய்யின் 65 ஆவது படத்தை நெல்சன் இயக்குகிறார். பெயரிடப்படாத இப்படம் தற்காலிகமாக ‘தளபதி 65’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்,இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21 ஆம் திகதி மாலை 6 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதற்கான காணொளியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Next Post

இலங்கை பெண் மீது கொண்ட பாசம்; அஞ்சலி செலுத்த இலங்கை வந்திருந்த துபாய் நாட்டவர்கள்!!!

Fri Jun 18 , 2021
Post Views: 713 துபாய் நாட்டில் வீட்டுப் பணிப் பெண்ணாக தொழில் புரிந்துவந்த இலங்கை பெண்ணொருவரின் சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது உடல் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த, துபாயில் பெண் தொழில் புரிந்த வீட்டின் உரிமையாளர் உட்பட ஆறு பேர் இலங்கை வந்திருந்தனர். துபாயில் இருந்து வந்தவர்கள் அம்மா, அம்மா என்று அழுதபடி இலங்கை பெண்ணின் சவப்பெட்டி தோளில் சுமந்து சென்றதுடன் முஸ்லிம் […]

Today Political Cartoons of Sri Lanka