யாழில் மீன்களுக்காக முண்டியடித்த மக்கள் பாசையூரில் நடந்த சம்பவம்!!

யாழ்.பாசையூர் மீன் சந்தையில் மீன்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது முண்டியடித்த சம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

கோவிட் தொற்று பரவல் காரணமாக தற்போது நாடளாவிய ரீதியில் பயண தடை அமுல்படுத்தப்பட்ட நிலையிலும் மக்கள் இவ்வாறு சுகாதார கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டுள்ளனர்.

இதன்போது சிலர் சமூக இடைவெளிகளை பேணாதும், முகக்கவசங்களை சீராக அணியாமலும் பொறுப்பற்ற விதத்தில் மீன் கொள்வனவில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் தங்களுக்கு வரும் ஆபத்துக்களை உணராமல் செயற்படுகிறார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Next Post

பாகிஸ்தான் அரசு வழங்கிய மாம்பழங்களை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது..!!

Sun Jun 13 , 2021
Post Views: 340 பாகிஸ்தான் அரசாங்கம் வழங்கிய மாம்பழங்களை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நல்ல எண்ணத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கை உட்பட சில நாடுகளுக்கு மாம்பழங்களை வழங்குவதற்கு முன்வந்திருந்தது. எனினும், கோவிட் பெருந்தொற்றின் அபாயத்தை கருத்தில் கொண்டு மாம்பழங்களை பெற்றுக் கொள்வதனை பல நாடுகள் நிராகரித்துள்ளன. சீனா, அமெரிக்கா, இலங்கை போன்ற 32 நாடுகளுக்கு பாகிஸ்தான் அரசாங்கம் மாம்பழங்களை அன்பளிப்பாக அளிக்க முன்வந்துள்ளது. எனினும்இ […]

Today Political Cartoons of Sri Lanka