வார இறுதி நாட்களில் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படுமா???

இன்று (23) இரவு 10 மணி முதல் நாடு பூராகவும் 30 மணித்தியால நடமாட்டக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளன, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

பொசொன் பூரணை காரணமாக மக்கள் ஒன்றுக்கூடுவதை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளது.

வார இறுதி நாட்களில் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை.

எதிர்வரும் சில நாட்களில், நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் என இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

Next Post

யாழில் மீண்டும் ஒரு பகுதியை முடக்க நடவடிக்கை…….

Wed Jun 23 , 2021
Post Views: 672 யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இரு கிராமசேவகர் பிரிவுகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளனர். ஜேஃ69இ ஜேஃ71 ஆகிய இரு கிராம சேவகர் பிரிவுகளிலும் கடந்த ஒருவாரத்தில் சுமார் 125 க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இரு கிராம சேவகர் பிரிவுகளையும் முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Today Political Cartoons of Sri Lanka