இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை..!!

இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலையை அதிகரிக்குமாறு பால்மாக்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

உலக சந்தைகளில் பால்மாக்களின் விலைகள் மற்றும் கப்பல் கட்டணம் என்பன அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலையை 350 ரூபாவாலும் 400 கிராம் பால்மா பொதியின் விலையை 140 ரூபாவாலும் அதிகரிக்க அனுமதியளிக்குமாறு நுகர்வோர் அதிகார சபையிடம் கோரப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கிராம் பால்மா பொதி 945 ரூபாவிற்கு தற்போது விற்பனை செய்யப்படுகின்றது. இறக்குமதி நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கமைய பால்மா விலை அதிகரிக்கப்படும் பட்சத்தில் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 1,295 ரூபாவாக உயர்வடையும்.

எவ்வாறாயினும் கொரோனா பரவலுக்கு மத்தியில் மக்களின் நலனை கருத்திற் கொண்டு பால்மா விலைகளை அதிகரிக்கபோவதில்லை என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

எனினும் இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலையேற்றம் தொடர்பில் மீண்டும் பரிசீலனை செய்யுமாறு குறித்த நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

Next Post

யாழில் வெதுப்பக உற்பத்தியான பாணினுள் பல்லி !

Thu Jun 17 , 2021
Post Views: 307 கொக்குவில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றில் பாணினுள் பல்லி காணப்பட்டுள்ளது. நேற்று மாலை அப்பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் உண்பதற்காக ஒரு வெதுப்பகத்தில்பாண் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அதை இரவு உண்பதற்காக எடுத்த வேளையில் பாணினுள்பல்லி காணப்பட்டுள்ளது. இதனையடுத்து அவ் வீட்டிலிருந்தவர்கள் பெரும் அதிர்சிக்குள்ளாகினர். தற்போது நிலவி வரும் பயணக்கட்டுப்பாடு வேளையில் வறுமை கோட்டில் வாழும் மக்கள் உட்பட அனைவரும் வெதுப்பக உணவுகளை வாங்கி தமது பசியை போக்குகின்றனர். எனவே […]

Today Political Cartoons of Sri Lanka