திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 13 பேருக்கு தொற்று – யாழில் சம்பவம்…!

சண்டிலிப்பாய் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவில் அனுமதியின்றி திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 13 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவில் பண்டத்தரிப்பு பகுதியில் கடந்த 4ம் திகதி சுகாதார நடைமுறைகளை மீறி திருமண நிகழ்வை நடாத்தியமைக்காக குறித்த நபர்கள் மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 78 பேருக்கு நேற்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் இன்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதையடுத்து குறித்த 13 பேரும் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் திருமண வீட்டாரை மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டதுடன், ஏனையோருக்கான வழக்கு தாக்குதல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Next Post

யாழ் அரசடி பகுதி விடுவிப்பு..!!

Fri Jun 18 , 2021
Post Views: 711 யாழ் நல்லூர் அரசடிப் பகுதி இன்று முதல் முடக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். நல்லூர் அரசடிப் பகுதியை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கடந்த 28ஆம் திகதி முதல் முடக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். நல்லூர் அரசடியில் கொவிட்-19 தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டனர். அதனால் அரசடியில் வதியும் மக்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டதுடன் அந்தப் பகுதி கடந்த […]

Today Political Cartoons of Sri Lanka