கோதுமை மாவின் அதிகரிப்பு (விலை 3.50 ரூபாவால்)….

பிரிமா நிறுவனம் உற்பத்தி செய்யும் கோதுமை மாவின் விலை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 3 ரூபாய் 50 காசுகளால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தமது முகவர்களுக்கு அறிவித்துள்ளது.

பிரிமா நிறுவனத்தின் 50 கிலோ கிராம் எடை கொண்ட மில்க் பிரேன்ட் கோதுமை மா பொதி 4 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

புதிய விலையேற்றத்தின்படி இன்று முதல் அதன் விலை 4 ஆயிரத்து 175 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரிமா நிறுவனம் ரொட்டிக்காக பயன்படுத்தும் கோதுமை மா கிலோ கிராம் ஒன்றின் விலைகளை அண்மையில் 4 ரூபாவால அதிகரித்தது.

இந்த நிலையில் பாண் உட்பட வெதுப்பக உணவு உற்பத்திகளுக்கு பயன்படுத்தப்படும் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், அந்த உணவு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் என வெதுப்பக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Post

பிக்பாஸ் நடிகர் கணேஷின் மனைவி நிஷா வீட்டில் ஏற்பட்ட சோகம்..!!

Tue Jun 15 , 2021
Post Views: 259 விஜய், சன் மற்றும் ஜீ டிவி சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை நிஷா. சின்னத்திரையில் நடித்து மிகவும் பிரபலமான இவர் பல சினிமாவிலும் நடித்துள்ளார். இவர், நடிகர் கணேஷ் வெங்கட்ராமனை திருமணம் செய்து கொண்டார். சீரியலில் பிஷியாக இருக்கும் நிஷா சமூக வலைத்தளங்கில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இந்நிலையில், நிஷாவின் பாட்டி உடல் நலக் குறைவால் பதிவகப்பட்டு காலமாகி இருக்கிறார். இதை உருக்கத்துடன் […]

Today Political Cartoons of Sri Lanka