இலங்கையில் சிறுவர்களை தாக்கும் புதிய நோய்..!!

இலங்கையில் பூனை மற்றும் நாய்கள் மூலம் சிறுவர்களுக்கு டோக்ஸோகாரியாசிஸ் (toxocariasis) எனப்படும் புதிய நோய் தொற்றுவதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

இதன்படி ,கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகளுடன் சிறுவர்கள் வீட்டில் அதிக நேரம் செலவிடுகிறார்கள்.

பெரும்பாலும் பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் போன்ற சிறிய விலங்குகளின் உடலில் இந்த புழு உருவாகின்றது.

இந்த விலங்குகளுடன் தொடர்பை பேணும் சிறுவர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் தோலில் புழுக்கள் ஏற்படும்.

இதன் ,பின்னர் அந்த புழுக்கள் குழந்தைகளின் கண்கள், மூளை மற்றும் நுரையீரலுக்குள் நுழைந்து கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று கூறினார்.

கடந்த சில நாட்களாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் ,இதுபோன்ற வீட்டு விலங்குகளுக்கு மருந்து கொடுப்பதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

Next Post

அறையில் ஒன்றாக இருந்து சிக்கிக் கொண்ட வரலக்‌ஷ்மி மற்றும் விஷால்.!

Fri Jun 18 , 2021
Post Views: 610 நடிகர் விஷால் மற்றும் வரலக்‌ஷ்மி இருவரும் சென்னையில் சுமார் 4 வருடங்களாக லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த வரலக்‌ஷ்மி இன்று வரை நடித்து வருகிறார். தற்போதும் 10 மேட்பட்ட திரைப்படங்களை கை வசம் வைத்திருக்கின்றார் வரலக்‌ஷ்மி. வரலக்‌ஷ்மி விஷால் காதல் என ஏற்கனவே கிசுகிசுக்கப் பட்ட போதும் விஷால் அனிஷாவை நிச்சயதார்த்தம் […]

Today Political Cartoons of Sri Lanka