ஜூன் 21இல் பயணத்தடை நீக்கம் என்பது இறுதியான முடிவல்ல…!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையை ஜூன் 21ஆம் திகதி நீக்குவதாக எடுக்கப்பட்ட முடிவு இறுதியானது அல்ல என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கக்கூடும் என அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் ஆபத்தானது என கொவிட் தொற்று பரவல் தொடர்பில் அவதானிக்கப்பட்டதையடுத்து பின்னர், அமுலில் இருந்த கட்டுப்பாட்டை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது. தடையை நீக்குவது குறித்து தற்போது கணிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

அந்த நேரத்தில் ஏற்படும் முன்னேற்றங்களின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Next Post

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி தனியார் வகுப்பு - 31 பேருக்கு கொரோனா தொற்று....

Wed Jun 16 , 2021
Post Views: 420 கட்டுகஸ்தோட்டைப் பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி நடத்தப்பட்டு வந்த தனியார் வகுப்பில் இருந்த 58 பேரில் 31 பேருக்கு கொவிட் -19 தொற்று உறுதியாகியுள்ளது. கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து கட்டுகஸ்தோட்டைஇ ரனவன வீதியில் தங்குமிடத்துடன் நடத்தப்பட்ட தனியார் வகுப்பொன்றை பொலிஸார் முற்றுகையிட்டனர். அங்கு 52 மாணவஇ மாணவிகள் கல்வி பயின்று வந்துள்ளனர். க.பொ.த. உயர்தர வகுப்பில் சித்தியடையாத மாணவர்கள் சிலருக்கே இவ்வாறு பெற்றோரின் அனுமதியுடன் […]

Today Political Cartoons of Sri Lanka