யாழில் 10 வயது சிறுவனுக்கு தந்தையால் நிகழ்ந்த சம்பவம்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நாவற்குழி புதிய குடியிருப்பு என்ற பகுதியில் குழந்தைகள் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட இரு சம்பவங்கள் மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்படி சம்பவங்கள் பற்றி தொியவருவதாவது, நாவற்குழி புதிய குடியிருப்புப் பகுதியில் நேற்றைய தினம் தந்தை ஒருவர் தனது பிள்ளைகள் மீதும் மனைவி மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளாா்.

அவருடைய 06 வயது, மற்றும் 10 வயதுடைய பிள்ளைகள் அவரது மனைவி மீது ஈவிரக்கம் இன்றி தாக்குதல் நடாத்தியுள்ளார்.

தனது 10 வயது நிரம்பிய பிள்ளையை காலில் கயிற்றால் கட்டி கிணற்றுக்குள் தலைகீழாக தொங்கவிட்டுள்ளாா். இச் சம்பவம் மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சம்பவத்தின் பின்னர் அப் பிள்ளைகளின் தந்தை வீட்டிலிருந்து வெளியேறி உள்ளாா்.

அதன் பின்னா் அவரது வீட்டின் அயலவர்கள் இணைந்து தலைகீழாக தொங்கவிடப்பட்ட பிள்ளையை கிணற்றிலிருந்து மீட்டதுடன் தாய் மற்றும் பிள்ளைகளை சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

சம்பவம் பற்றி சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில்,குறித்த நபர் முதல் நாள் இரவு சாியான போதையில் வந்ததாகவும் மறு நாள் அவா் வீட்டில் வைத்து இருந்த 400.00 ரூபா பணத்தைக் காணவில்லை என்று தெரிவித்தே மனைவிமீதும் பிள்ளைகள் மீதும் தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது.

தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை மற்றுமொரு சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.

கணவன் ஒருவா் தன்னுடைய மனைவியின் தாயாருடைய தொலைபேசியை திருடிச் சென்று அதனை விற்று விட்டு அந்தப் பணத்தில் போதைப்பொருள் பாவித்துவிட்டு தனது வீட்டுக்கு வந்து மனைவியையும் தனது ஆறு மாதக் குழந்தையையும் கண்மூடித்தனமான தாக்ககயுள்ளாா் என்று கூறப்படுகின்றது.

அந்த சம்பவத்தில் ஆறுமாதப் பிஞ்சு குழந்தையின் உதடு உடைந்து காயமடைந்துள்ளதாகவும் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்.மாவட்டத்தில் பயணத்தடை மற்றும் இறுக்கமான கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் குடும்பத்தில் வேலை இன்மை, சாப்பாட்டிற்கு கஸ்டமான நிலையில் குடும்பத்தவா்கள் இருக்கும் போது இப்படியான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Next Post

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு.

Sun Jun 13 , 2021
Post Views: 408 அரசாங்கத்தில் பணி புரியும் ஊழியர்கள் அனைவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய தீடீர் என்று அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அரச சொத்துகளையோ…? பொது மக்களின் சொத்துகளையோ….? திருடவோ…? கொள்ளையடிக்கவோ….? ஏமாற்றம் செய்யவோ……? செய்தால், அதற்கான ஆதாரங்களுடன் நிறுவிக்கப்பட்டால் அவர்களுக்கான வேலைகளை பறிமுதல் செய்வது மாத்திரம் கிடையாது அவர்களின் மூன்று [ 3 ] தலைமுறைக்கு அரச வேலை வாய்ப்பு நிரத்தரமாக தடை செய்யப்படும் என்றும் இதில் இனமத […]

Today Political Cartoons of Sri Lanka