கொழும்பில் கொவிட் வைரஸை கட்டுப்படுத்த முடியாமைக்கான காரணம் – அதிகாரிகள் தெரிவித்த விடயம்….

வேறு இடங்களில் இருந்து கொழும்பு நகரத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பயண கட்டுப்பாடு விதிப்பதன் மூலம் கொவிட் தொற்றினை கட்டுப்படுத்தப்பட முடியவில்லை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல தனியார் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளால் அத்தியாவசிய சேவைக்கான அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ளப்பட்டமையே இதற்கு காரணம் என சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு சேவை வழங்காத பல நிறுவனங்கள் இவ்வாறு ஊழியர்களை அழைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.இதனால் பயணக் கட்டுப்பாட்டை குறைக்க முடியாமல் உள்ளதாகவும், இதனால் கொழும்பில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனங்கள் குவிந்துள்ளன. இதன்மூலம் கொவிட் தொற்றினை கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் கூடிய அவதானம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Next Post

20வயது இளைஞன் செய்த கீழ்த்தரமான செயல்..!!

Mon Jun 14 , 2021
Post Views: 370 முல்லைத்தீவு நகர் பகுதியில் பயண அனுமதியைப் பெற்று மீன் ஏற்றி செல்லும் வாகனத்தில் 250 கால்போத்தல் சாராய போத்தல்களை சட்டவிரோதமாக கொண்டு சென்ற இளைஞர் ஒருவரை சிறப்பு அதிரடிப்படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்துள்ளார்கள். மேலும் வாகனங்களில் மீன்களை ஏற்றிசெல்வதற்கான பயண அனுமதிப்பத்திரத்தினை பயன்படுத்தி புதுக்குடியிருப்பில் இருந்து முல்லைத்தீவு நோக்கி செல்கையில் கரைச்சிக்குடியிருப்பு பகுதியில் வைத்து சிறப்பு அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியினை சேர்ந்த 20 […]

Today Political Cartoons of Sri Lanka