கோண்டாவிலில் கடன் காசு கேட்டுச் சென்றவர் மீது தாக்குதல்..!!!

கோண்டாவில் காளி கோவிலடியில் கடன் பணத்தைக் கேட்டு வீடு தேடிச் சென்றவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தந்தையும் மகனும் இணைந்து அவரின் தலை மற்றும் கழுத்தில் வாளினால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் திங்கட்கிழமை நண்பகல் இடம்பெற்றது.

சம்பவத்தில் மோகனராஜா ரஜீவன் (வயது-37) என்பவரே சம்பவத்தில் படுகாயமடைந்தார்.

சம்பவத்தையடுத்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் தாக்குதல் நடத்திய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Next Post

பயணத்தடை விதிகளை மீறி பிறந்தநாள் கொண்டாடிய மருத்துவருக்கு நேர்ந்த கதி..!!

Thu Jul 8 , 2021
Post Views: 508 கிளிநொச்சி – கனகபுரம் பகுதியில் மருத்துவர் ஒருவருடைய 50 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் அதிகளவானோர் கலந்து கொண்டு நடப்பதாக பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் குறித்த வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி கனகபுரத்தில் மருத்துவர் ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாடம் நடைபெறுவதாகவும் நிகழ்வில் 20 இற்கும் மேற்பட்ட சுகாதாரத் தரப்பினர் உட்பட்ட பெருமளவானவர்கள் பங்குகொண்டிருப்பதாகவும் பொதுமக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது. இதயைடுத்து சம்பவ […]

Today Political Cartoons of Sri Lanka