ஒரு நடிகையின் கைது இலங்கையில் பாரிய அழிவை மூடி மறைத்துவிட்டது!!

இலங்கையின் சுற்று சூழலின் பாதிப்பினை இரண்டாம் இடத்திற்கு தள்ளிச் சென்ற சிங்கள நடிகை தொடர்பில் பிரபல சர்வதேச சஞ்சிகையான economist  செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வாரத்தில் இலங்கையில் அதிகமாக பேசப்பட்ட தலைப்பாக சிங்கள நடிகை பியுமி ஹன்சமாலி காணப்பட்டார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடலில் மூழ்கிய அன்றைய தினம் 28 வயதான நடிகை பியுமி ஹன்சமாலி, அழகு கலை நிபுணர் உட்பட 13 பேர் பிறந்த நாள் விருந்து ஒன்றில் கலந்து கொண்ட காரணத்தால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தின் பின் கூகுள் தேடுதல் உட்பட அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அதிகமாக தேடப்பட்ட ஒருவராக நடிகை பியுமி ஹன்சமாலி காணப்பட்டுள்ளார் என்று economist இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

இரண்டு வாரத்திற்கும் மேலாக கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் இலங்கையின் கடற்பகுதியில் ஏற்பட்ட பாரிய பாதிப்பு தொடர்பில் இலங்கையர்கள் உட்பட அனைத்து அமைப்புகள் பலவற்றின் கருத்துகளை பியுமி ஹன்சமாலியின் கைது மூடி மறைத்துள்ளதாக economist செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Post

கொழும்பில் கொவிட் வைரஸை கட்டுப்படுத்த முடியாமைக்கான காரணம் - அதிகாரிகள் தெரிவித்த விடயம்....

Mon Jun 14 , 2021
Post Views: 1,011 வேறு இடங்களில் இருந்து கொழும்பு நகரத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. பயண கட்டுப்பாடு விதிப்பதன் மூலம் கொவிட் தொற்றினை கட்டுப்படுத்தப்பட முடியவில்லை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. நாட்டின் பல தனியார் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளால் அத்தியாவசிய சேவைக்கான அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ளப்பட்டமையே இதற்கு காரணம் என சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார். […]

Today Political Cartoons of Sri Lanka