மிக ஆபத்தான டெல்டா கொவிட் திரிபுடன் 5 பேர் கொழும்பில் அடையாளம்..!!

இந்தியாவில் மிகவேகமாக பரவிவரும் வீரியம் கொண்ட டெல்டா (B.1.617.2) கொவிட் திரிபு தொற்று உறுதியான 5 பேர் கொழும்பு, தெமட்டகொட பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தற்போது இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள B.117 கொவிட் திரிபை காட்டிலும் 50 மடங்கு பரவல் வேகம் கொண்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனைகளில் குறித்த ஐவரும் சமூகத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்தார்.

கொழும்பு – 9, ஆராமய பகுதியில் குறித்த தொற்றுறுதியானவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெல்டா திரிபுடன் கூடிய தொற்றாளர்கள் சமூகத்திலிருந்து அடையாளம் காணப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இதற்கு முன்னதாக டெல்டா கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்ட இருவர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.

Next Post

வரும் சனிக்கிழமை தீர்மானமிக்க நாள் – விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை...!!

Thu Jun 17 , 2021
Post Views: 349 எதிர்வரும் 21ஆம் திகதி பயணக்கட்டுபாடு நீக்கப்படுவது தொடர்பில் இதுவரையில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும் வீதிகளில் வாகனங்கள் அதிக அளவில் பயணிப்பதே அதற்கு காரணமாகியுள்ளது. இந்த நிலையில் 21ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு நீக்குவதற்கு முன்னர் கொவிட் சமூக பரவல் தொடர்பில் ஆராய்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் வீதிகளில் செல்லும் மக்களுக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதார பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்த வாரம் […]

Today Political Cartoons of Sri Lanka